Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
சனி சூரியனால் உருவாகியுள்ள நவபஞ்ச ராஜயோகம்: நவம்பர் 16 வரை இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் தான்..
Sun Saturn Made Navpancham Rajyog 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் தான் சூரிய பகவான். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைந்தார்.
அதே சமயம் நீதிமான் சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் சனியில் இருந்து 9 ஆவது வீட்டிலும், சனி சூரியனில் இருந்து 5 ஆவது வீட்டிலும் உள்ளார். இதனால் சூரியன் மற்றும் சனியின் நிலையால் நவபஞ்ச ராஜயோகம் உருவாகியுள்ளது.

இந்த ராஜயோகமானது நவம்பர் 16 ஆம் வரை நீடித்திருக்கும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இப்போது சனி சூரியனால் உருவாகியுள்ள நவபஞ்ச ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகமானது நிதி நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். தொழிலில் நல்ல வளர்ச்சியை உண்டாக்கும். பணிபுரிபவர்கள் வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வீட்டில் உள்ளோரின் முழு ஆதரவு கிடைக்கு. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். லட்சுமி தேவியின் ஆசியால் பண வரவு சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகமானது வேலையில் நல்ல வெற்றியைப் பெற வைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவடையும். தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெற்றி பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகத்தால் நவம்பர் 16 வரை அதிஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக நல்ல வெற்றிகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் அல்லது ஆர்டர்கள் கிடைக்கும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
