Latest Updates
-
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
1 வருடத்திற்கு பின் துலாம் ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்!
Sun Mercury Makes Budhaditya Rajyog In Libra 2024: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி ராசியை மாற்றும் போது சில நேரங்களில் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அக்டோபர் 17 ஆம் தேதி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். அதற்கு முன் அக்டோபர் 10 ஆம் தேதி புதன் துலாம் ராசிக்குள் நுழைந்துவிடுவார். இதனால் அக்டோபர் 17 ஆம் தேதி நிகழும் சூரிய பெயர்ச்சியால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த சுப யோகமானது ஒரு வருடத்திற்கு பின் நிகழவுள்ளது. இதன் விளைவாக அனைத்து ராசிகளிலுமே அதன் தாக்கம் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது துலாம் ராசியில் உருவாகவுள்ள புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வழிகள் பிறக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கூட்டு வேலைகளில் நல்ல லாபம் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைத்து, நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்க பல வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். தந்தையுடனான உறவு வழக்கத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ்வீர்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications