Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
1 வருடம் கழித்து மேஷ ராசியில் உருவாகும் சக்திவாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Sun Mercury Make Budhaditya Rajyog In Aries After 1 Year: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன. அதோடு அவ்வப்போது கிரகங்களின் ராசி மாற்றங்களினால் சில ராஜயோகங்களும் உருவாகின்றன. இதன் விளைவும் அனைத்து மனிதர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
அந்த வகையில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவார். அப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. இந்நிலையில் 2025 ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்லவுள்ளார்.

மேஷ ராசியில் சூரியன் நுழைவதால் முதல் தமிழ் மாதமான சித்திரை பிறக்கிறது. இதனால் விசுவாவசு என்ற தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. முக்கியமாக சூரியன் மேஷ ராசியில் பயணிக்கும் வேளையில், மே மாதத்தில் புதனும் மேஷ ராசிக்குள் நுழைகிறார். இதனால் மேஷ ராசியில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த ராஜயோகத்தால், சில ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறவுள்ளனர். மேலும் தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது மேஷ ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் நல்ல உயர்வைக் காண்பார்கள். பல வழிகளில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சூரியனின் அருளால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பணியிடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெறலாம். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் மற்றும் சூரியனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் அவ்வப்போது திடீர் நிதி ஆதாயங்களும் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். மேலும் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் முக்கிய வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலதிபர்கள் சிக்கிய பணத்தைப் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்களின் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 9 ஆவது வீட்டில் சூரியன், புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கம்.
மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம் அல்லது புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறலாம். நிதி ரீதியாக இக்காலம் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவு சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
