Latest Updates
-
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க..
1 வருடம் கழித்து விருச்சிகத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலமா இருக்கும்...
Sun Mercury Made Budhaditya Rajyog On November 2024: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, அவ்வப்போது சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன் அக்டோபர் 29 ஆம் தேதி விருச்சிக ராசியில் நுழைந்தார். இந்நிலையில் நவம்பர் 16 ஆம் தேதி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும் விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இதனால் விருச்சிக ராசியில் மிகவும் மங்களகரமான யோகமான புதாத்திய ராஜயோகம் உருவாகியுள்ளது.

விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாயின் ராசியில் 1 வருடத்திற்கு பின் இந்த புதாத்திய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படப் போகிறது. அதோடு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கவுள்ளது. இப்போது புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். அத்துடன் மரியாதையும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். கூட்டு தொழில் செய்பவர்க நல்ல பலன்களைப் பெறக்கூடும்.
கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் திருமணமாகி இதுவரை குழந்தை பாக்கியம் பெறாமல் இருந்தால், இக்காலத்தில் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான நட்புறவு வலுவடையும். உங்களின் மரியாதையும் அதிகரிக்கும். ஒருதலையாக காதலித்து வந்தால், அதில் வெற்றி பெறுவீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்களைப் பெறக்கூடும். வியாபாரம் செய்து வந்தால், நல்ல லாபத்தைப் பெறக்கூடும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். புதிய தொழிலை தொடங்க விரும்பி முயற்சித்தால், நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
