Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
சூரியனும், செவ்வாயும் ராசியை மாற்றுவதால் இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்...!
ஜோதிட கணிப்புகளின் படி வரப்போகும் ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கப்போகிறது. கிரகங்களின் தளபதியான செவ்வாய் மற்றும் கிரகங்களின் ராஜாவான சூரியன் தங்கள் ராசிகளை மாற்றப் போகிறார்கள். ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகரும்போது கிரகப் பெயர்ச்சி ஏற்படுகிறது, இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது.
சூரியன் ஏப்ரல் மாதத்தில் மேஷ ராசிக்குள் நுழைகிறது. அதேசமயம் , செவ்வாய் மிதுன ராசியை விட்டு வெளியேறி கடக ராசிக்குள் நுழைகிறது. இந்த கிரக மாற்றங்கள் 12 ராசிகளிலும் மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஏப்ரல் மாதத்தில் சூரியன் மற்றும் செவ்வாய் இயக்கம் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் எனறு இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
சூரியன் மற்றும் செவ்வாயின் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மைகளை அளிக்கப்போகிறது. ஏனெனில் செவ்வாய் மேஷ ராசியின் நான்காவது வீட்டில் சஞ்சரிக்கிறார், அதே நேரத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். எனவே, மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பொருளாதாரரீதியான நன்மைகளை அனுபவிக்கலாம்.
இந்த கிரக மாற்றங்களால் அவர்கள் தைரியத்தையும் வீரத்தையும் எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில், நிதி நிலை மேம்படும் மற்றும் சேமிப்பு உயரும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும், குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிட முடியும். மேலும், அவர்கள் விரும்பிய புதிய வாகனம் அல்லது புதிய சொத்தை வாங்கலாம். பல வெற்றிகளை அடைய அவர்களின் ஆரோக்கியம் துணையாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் ராசி மாற்றம் சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. செவ்வாய் துலாம் ராசியின் கர்ம ஸ்தானத்திலும், சூரியன் ஏழாவது வீட்டிலும் சஞ்சரிப்பதால், அவர்களின் தொழில் வாழ்க்கையில் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். மேலும் சமூகத்தில் அங்கீகாரத்தையும், மரியாதையையும் பெறுவார்கள்.
அவர்களின் திருமண வாழ்க்கை நிலையானதாக இருக்கும், மேலும் வேலையில்லாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் சரியான வேலை கிடைக்கும். அவர்களின் துணையுடன் இருந்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும், மேலும் அவர்கள் உறவுகளில் உள்ள விரிசல்களை எளிதில் சமாளிக்க முடியும். சிங்கிளாக இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் அவர்களுக்கேற்ற துணையைக் கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சூரியன்-செவ்வாய் அபரிமிதமான பலன்களை அளிக்கப்போகிறது. சூரியன் மீன ராசியின் செல்வத்தின் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார், செவ்வாய் ஐந்தாவது வீட்டிற்கு பெயர்ச்சியாகப் போகிறார். இது இந்த காலகட்டத்தில் திடீர் பண லாபத்தை ஏற்படுத்தும். மேலும், அவர்கள் புதிய முதலீடுகள் அல்லது வணிகத்தைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், அதைத் தொடங்க இதுவே சிறந்த நேரம்.
இந்த நேரத்தில், மீன ராசிக்காரர்கள் குழந்தைகள் தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். அவர்கள் பேச்சின் சக்தியும் அதிகரிக்கும், இது மற்றவர்களை ஈர்க்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் எந்த பெரிய ஆரோக்கிய பிரச்சினையையும் எதிர்கொள்ள மாட்டார்கள், மேலும் பணிகளை தாமதமின்றி சரியான நேரத்தில் முடிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

