Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
சூரியன் செவ்வாய் உருவாக்கும் நவபஞ்ச யோகம்: மார்ச் 08 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது..
Sun Mars Make Navpancham Yog On March 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி, சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் மார்ச் 08 ஆம் தேதி கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயும் நவபஞ்ச யோகத்தை உருவாக்கவுள்ளனர். இந்த யோகமானது கிரகங்கள் ஒன்றுகொன்று 120 டிகிரி தொலைவில் இருக்கும் போது உருவாகும்.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. இப்போது சூரியன் செவ்வாயால் உருவாகும் நவபஞ்ச யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகமானது வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறது. வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலை செய்து வந்தால், நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. மேலும் இக்காலத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள விரும்புவீர்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகமானது பல நன்மைகளை வழங்கப் போகிறது. வணிகர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். கடன்களில் இருந்து விடுபடுவீர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்த பணம் நல்ல லாபத்தைத் தரும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களையும் தரும். கடின உழைப்பிற்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும். இதனால் வெற்றிகள் குவியும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை தேடி வரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகமானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். அவ்வப்போது நிதி ஆதாயம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். இது எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் இனிமையாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications