Latest Updates
-
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
100 ஆண்டுகள் கழித்து குரு சூரியனால் உருவாகும் அரிய ராஜயோகம்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
Navpancham Rajyog 2025: ஜோதிடத்தின் படி கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சூரியன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். மறுபுறம் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் நவம்பர் 17 ஆம் தேதி குரு பகவானும், சூரியனும் ஒருவருக்கொருவர் 120 டிகிரி கோணத்தில் இருந்து, நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகமானது மிகவும் மங்களகரமானது. இந்த நிலையில் சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் இந்த சுப ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். மேலும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இப்போது குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் சிறப்பாக இருக்கப் போகிறது. குறிப்பாக வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். கடின உழைப்புக்கான பலனைப் பெறக்கூடும். மேலும் புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். திட்டமிட்ட திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சமூகத்தில் மதிப்பும், மதியாதையும் அதிகரிக்கும். கடந்த கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் ஆளுமை மேம்படும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் விளைவாக சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. புத்திசாலித்தனத்துடனும், விவேகத்துடனும் செயல்படுவீர்கள். இதனால் பல முக்கியமான முடிவுகளையும் சிறப்பாக எடுப்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பெற்றொருடனான உறவு சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
