Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
Solar Eclipse 2025: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களை பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கபோகுது!
Solar Eclipse 2025: இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் கடந்த செப்டம்பர் 07 ஆம் தேதி தான் நிகழ்ந்தது. இந்த சந்திர கிரகணம் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் பல ஆண்டுகளுக்கு பின் சந்திர கிரகணமானது இந்தியாவில் தெரிந்தது.
இந்நிலையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் செப்டம்பர் 21 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த கிரகணம் இரவு 11 மணிக்கு தொடங்கி, அதிகாலை 3.23 மணி வரை நீடித்திருக்கும். இந்த சூரிய கிரகணம் நியூசிலாந்து, பிஜி, அண்டார்டிகா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தெரியும். ஆனால் இந்தியாவில் தெரியாது.

பஞ்சாங்கத்தின் படி, இந்த சூரிய கிரகணம் கன்னி மற்றும் உத்திரம் நட்சத்திரத்தில் நிகழவுள்ளது. என்ன தான் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாவிட்டாலும், இந்நிகழ்வின் போது கிரகங்களின் ஆற்றலில் மாற்றம் ஏற்பட்டு, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையை பாதிக்கும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நம்பிக்கையானவர் உங்களை ஏமாற்றலாம். இது உங்களின் மனஉறுதியை உடைத்து, உங்களின் நிலையை பலவீனப்படுத்தும். மேலும் பண பிரச்சனைகளை திடீரென்று சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகளையும் சந்திக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் எந்த விஷயத்தையும் எச்சரிக்கையாக செய்ய வேண்டும்.
கன்னி
ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் கன்னி ராசிக்காரர்களுக்கு சவாலானதாக இருக்கும். அதுவும் வேலை, ஆரோக்கியம், நிதி விஷயங்கள் மற்றும் காதல் விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது பெரிய இழப்பை ஏற்படுத்தும். மேலும் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். பணப் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். நெருக்கமான ஒருவர் உங்களை ஏமாற்றலாம். நீதிமன்ற வழக்குகளில் சிக்கி வெளிவர முடியாமல் அவதிப்படக்கூடும். ஆனால் பொறுமையாகவும், கவனமாகவும் இருந்தால், பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications