Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
30 ஆண்டுக்கு பின் உருவாகும் சஷ மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால் கோடிகளை குவிக்கப்போற 3 ராசிக்காரங்க இவங்கதான்...!
ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகம் மற்ற கிரகங்களுடன் இணையும் போது சுபயோகங்கள் உருவாகின்றன. இந்த சுபயோகங்கள் ஒருவரின் அதிர்ஷ்டத்தை மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஜனவரி 28, 2025 அன்று, செல்வத்தையும் சிறப்பையும் தரும் சுக்கிரன், அதன் சொந்த ராசியான மீனத்தில் சஞ்சரித்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார். அதே நேரத்தில், கர்மாவை வழங்கும் சனிபகவான், கும்ப ராசியில் சஞ்சரித்து சஷ ராஜயோகத்தை உருவாக்குகிறார்.
சஷ மற்றும் மாளவ்ய ராஜயோகம் ஆகியவை விதியை மாற்றக்கூடிய சக்திவாய்ந்த ராஜயோகங்களாகும். சஷ ராஜயோகம் சனியால் ஆளப்படுகிறது மற்றும் அதிகாரம், படைப்பாற்றல் மற்றும் ஒழுக்கத்தைக் குறிக்கிறது. மறுபுறம், சுக்கிரனால் ஆளப்படும் மாளவ்ய ராஜயோகம், ஒருவருக்கு வசீகரம், ஆடம்பரம் மற்றும் கலைத்திறமைகளை அளிக்கிறது.

இந்த இரண்டு சக்திவாய்ந்த யோகங்களின் உருவாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் அபரிமிதமான பலன்களை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
சஷ மற்றும் மாளவ்ய ராஜயோகம் உருவாகும் காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கும். இந்த காலகட்டத்தில் சனி பகவான் உங்கள் ஜாதகத்தின் கர்ம ஸ்தானத்தில் நிலைபெற்று இருப்பார், சுக்கிரன் பெயர்ச்சி அடைந்து பதினொன்றாவது வீட்டில் இருப்பார். இதன் காரணமாக, உங்கள் வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
வேலையில்லாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் சிறந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் வேலையில் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். இதனால் ரிஷப ராசிக்காரர்களின் நிதி நிலை கணிசமாக மேம்படும், மேலும் உங்களின் முதலீடுகள் பெரும் லாபத்தை ஈட்டும். கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் உங்களுக்கு எதிர்பாராத லாபத்தைக் கொடுக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சஷ மற்றும் மாளவ்ய ராஜயோகம் சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. மிதுன ராசிக்காரர்களின் வருமான வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதால், அவர்களின் நிதி நிலைமை பெரிதும் மேம்படும். சுக்கிரன் கர்ம வீட்டில் சஞ்சரிப்பதால், இந்த காலகட்டத்தில் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு இருக்கும்.
இதனால் புதிய வாய்ப்புகளுக்கான கதவு திறக்கும். தொழில் மற்றும் வணிகத் துறையில் அவர்கள் பெரிய வெற்றிகளை அடைவார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு, பதவி உயர்வுகள் அல்லது அதிக சம்பளத்துடன் கூடிய புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் புதிய ஒப்பந்தத்தை பெறலாம், இது கணிசமான நிதி ஆதாயங்களுக்கு வழிவகுக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சஷ மற்றும் மாளவ்ய ராஜயோகம் எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. சனிபகவான் விருச்சிக ராசியின் நான்காவது வீட்டில் சஞ்சரிப்பார், மேலும் சுக்கிரன் உங்கள் உங்களின் ஐந்தாவது வீட்டில் சஞ்சரிப்பார். இதனால், இந்த காலகட்டத்தில் பொருளாதாரம் மற்றும் வசதிகள் அதிகரிக்கும்.
இந்த காலகட்டத்தில் அவர்கள் ஒரு புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கலாம், மேலும் சமூகத்தில் நற்பெயரும், மரியாதையும் பெரிதும் அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவுகள் வலுவடையும், குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணமான தம்பதிகள் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
