Latest Updates
-
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
500 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் சனி, குரு பெயர்ச்சி: நவம்பர் முதல் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் தீரும்..
Shani Vakra Nivarthi And Guru Vakri In November 2025: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் நவம்பர் மாதம் ஜோதிட கண்ணோட்டத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்கள் தனது நிலையை மாற்றவுள்ளன.
குறிப்பாக நீதிமான் சனி பகவான் நவம்பர் மாதத்தில் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி இந்த மாதத்தில் தேவர்களின் குருவான குரு பகவான் கடக ராசியில் வக்ரமாகி பயணிக்கவுள்ளார். இப்படி ஒரே மாதத்தில் அடுத்தடுத்து சனி பகவானும், குரு பகவானும் தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளனர்.

இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் தலைவிதி மாறி, அதிர்ஷ்டம் பிரகாசித்து, நிதி நிலையில் நல்ல உயர்வும், பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். அதோடு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இப்போது நவம்பர் மாதத்தில் நடக்கும் சனி, குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் சனி மற்றும் குருவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் சிறப்பாக இருக்கப் போகிறது. அதுவும் சனி பகவான் 2 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். அதே வேளையில் குரு பகவான் 6 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நவம்பர் முதல் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
தொழிலதிபர்களின் பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். தொழிலதிபர்களின் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் சனி மற்றும் குருவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. அதுவும் சனி பகவான் 10 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். அதே சமயம் குரு பகவான் 2 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார்.
இதன் விளைவாக வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல உயர்வைக் காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தந்தையுடனான உறவு வலுவடையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதத்தில் சனி மற்றும் குருவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது. அதுவும் சனி பகவான் 3 ஆவது வீட்டில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார் மற்றும் குரு பகவான் 7 ஆவது வீட்டில் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும்.
பல ரிஸ்க்குகளை எடுப்பீர்கள் மற்றும் அதில் வெற்றியையும் பெறுவீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
