Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
சனி அஸ்தமனமாவதால் மார்ச் முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்... உங்க ராசி இதுல இருக்கா?
Shani Asta 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். அதுவும் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார். இதற்கிடையில் சனி பகவானின் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படலாம்.
அதில் 2026 மார்ச் 13 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். அதன் பின் ஏப்ரல் 22 ஆம் தேதி உதயமாவார். இப்படி சனி பகவான் அஸ்தமனமாவதால், சனி பகவான் பலவீனமான நிலையில் இருப்பார். சனி பகவானின் இந்த நிலையின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

இருந்தாலும் சில ராசிக்காரர்கள் சனி அஸ்தமனமாவதால் நிறைய மோசமான விளைவுகளை சந்திக்க போகிறார்கள். குறிப்பாக நிதி நிலையில் பெரிய இழப்புக்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். தொழிலில் பல சிரமங்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இப்போது சனி அஸ்தமனமாவதால் மார்ச் முதல் எந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாவதால், இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அவசரமாக எந்த முடிவுகளை எடுத்தாலும் நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அதிகமாக கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அதுவே பிரச்சனைகளை அதிகரிக்கும். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டும். எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே கவனிக்க அறிவுறுத்தப்படுகிறது.
துலாம்
துலாம் ராசியின் 6 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பல இழப்புக்களை சந்திக்க நேரிடும். செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பண கஷ்டம் அதிகரிக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சனியின் நிலையால் ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். உண்ணும் உணவுகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். யாருடனும் சண்டையிலோ அல்லது வாக்குவாதத்திலோ ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். பண விஷயத்தில் பெரிய தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நிதி விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகம் ஏற்படலாம். சனியின் மோசமான நிலையால் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். இதனால் உங்களின் கவலைகள் அதிகரிக்கும். கோபத்தையும், ஆணவத்தையும் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திப்பீர்கள்.
மகரம்
மகர ராசியின் 3 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து லாபத்தைப் பெற்றாலும், நிறைய செலவுகளையும் சந்திக்க நேரிடும். முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். கோபத்தில் எந்த முடிவையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் இழப்புக்களை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் மார்ச் முதல் ஏப்ரல் வரை சற்று கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











