Latest Updates
-
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
ஜூன் 20-ல் உருவாகும் ஷடாஷ்ட யோகம்: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்...
Shadashtak Yog On 20 June 2025: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். அப்படி கிரகங்கள் ராசியை மாற்றும் போது, பல்வேறு யோகங்கள் உருவாகி, அதன் தாக்கம் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் சில யோகங்கள் சிறப்பான பலனையும், இன்னும் சில யோகங்கள் வாழ்வில் பிரச்சனைகளையும் கொண்டு வரும்.
அந்த வகையில் ஜூன் 20 ஆம் தேதி நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவானும், கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாயும் ஒருவருக்கொருவர் 150 டிகிரி கோணத்தில் இருந்து, ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கவுள்ளன. இந்த யோகம் சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருந்தாலும், சிலருக்கு சவாலையும், சிரமங்களையும் தரும்.

அதுவும் ஜூன் 20-ல் உருவாகும் ஷடாஷ்டக யோகம் சில ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு, உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் வாழ்க்கையில் பிற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, இந்த காலத்தில் விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம். இப்போது சனி செவ்வாயால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது ஆரோக்கிய பிரச்சனைகளையும், வணிகத்தில் பிரச்சனைகளையும் சந்திக்க வைக்கும். அதுவும் செரிமான பிரச்சனைகள், தொற்றுகள் போன்றவற்றால் அவதிப்படக்கூடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். இதன் மூலம் பெற்றோரின் மனதில் பதட்டம் அதிகரிக்கும்.
தொழிலில் எதிர்பாராத அளவில் நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் குறையும். சுற்றியுள்ளவர்களுடன் சண்டைகள் அல்லது தகராறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழ்நிலையில் நிதானமாக இருப்பது, உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துவது மற்றும் கோபத்தைத் தவிர்ப்பது அவசியம். பொறுமையைக் கடைப்பிடித்தால், வாழ்வில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் குறையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது பலவிதமான சவால்களை சந்திக்க வைக்கும். தேவையற்ற செலவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதன் மூலம் நிதி நிலை பலவீனமடையும். எனவே ஒவ்வொரு செலவிலும் கவனம் செலுத்துவது முக்கியம். சிறு சிறு ஆரோக்கிய பிரச்சனைகள் அவ்வப்போது தொந்தரவு செய்யும். முக்கியமாக சோர்வு, தலைவலி அல்லது மன அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும்.
பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். அலுவலக சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இக்காலத்தில் தேவையற்ற சண்டைகள் ஏற்படாமல் இருக்க உங்கள் வார்த்தைகள் மற்றும் நடத்தையில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மொத்தத்தில் இக்காலகட்டத்தில் மிகவும் நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகத்தின் தாக்கதால் மன அழுத்தம் அதிகரிக்கும். எப்போதும் ஏதாவது மன வருத்தம் இருந்தவாறு இருக்கும். கோபம் அதிகமாக வரும். இந்த கோபத்தால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். வாழ்க்கைத் துணையுடன் விரிசல் ஏற்படும் வாய்ப்புள்ளது.
பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். இதனால் மன அழுத்தத்தையும் சோர்வையும் உணரக்கூடும். நிதி விஷயங்களில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். யாருக்கும் கடன் கொடுப்பதையோ அல்லது முதலீடு செய்வதையோ தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பை சந்திக்க நேரிடும். வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications