Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
September Month Rasi Palan 2025: இந்த 7 ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
September Month Rasi Palan 2025: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதத்தில் நிகழும் கிரக பெயர்ச்சிகளால், பல மங்களகரமான யோகங்கள் உருவாகவுள்ளன. இந்த யோகங்களால் செப்டம்பர் மாதமானது மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.
உங்களுக்கு 2025 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? கீழே 12 ராசிக்காரர்களும் செப்டம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என செப்டம்பர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2025 செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் உங்களுக்கு உற்சாகமான மாதமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றத்துடன், சிலருக்கு புதிய பொறுப்புக்களும் அதிகரிக்கும். வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இம்மாதம் சிறந்ததாக இருக்கும். ஆனால் குடும்ப மற்றும் வீட்டு விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் அதிகரிக்கலாம். நிதி ரீதியாக சாதாரணமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். நீண்ட காலம் கழித்து உங்களின் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள் மற்றும் புதிய நண்பர்களையும் பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வீர்கள். நிதி நிலை மேம்படும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். யாருடனும் சண்டை இழுத்துவிடாதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும், புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும். அதுவும் தொழில் ரீதியாக, கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். இருப்பினும் பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். வணிகர்கள் நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். நிதி ரீதியாக சாதாரணமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தலை மற்றும் கண்களின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் நம்பிக்கையை அதிகரிக்கும் மாதமாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலைமை வலுபெறும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இம்மாதத்தில் மிதமான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இருப்பினும் பயணங்களின் போது எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் கலவையான பலன்களைத் தரும் மாதமாக இருக்கும். பணியிடத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும். இருப்பினும் உங்களின் திறமை மற்றும் அனுபவத்தால் அவற்றை எளிதில் சமாளிப்பீர்கள். நிதி நிலை மேம்படும். இருப்பினும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகள் மற்றும் பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள். இம்மாதத்தில் உங்களை சமூகத்தில் உயர்நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் புதிய தொடர்புகளும், வாய்ப்புகளும் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் உங்களின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலை மற்றும் வணிகத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். நிதி விஷயத்தில் புத்திசாலித்தனமாக முதலீடுகளை செய்வது நல்லது. குடும்பத்தினருடனான ஒருங்கிணைப்பும், புரிதலும் அதிகரிக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க போதுமான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனத்தை செலுத்தினால், நல்ல வெற்றியைப் பெறலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். மேலும் தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களும் கிடைக்கும். நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். இம்மாதத்தில் புதிய முதலீடுகளை செய்வதாக இருந்தால், புத்திசாலித்தனமாக யோசித்து செய்யுங்கள். குடும்ப வாழ்க்கையில் சமநிலையை பேண வேண்டும். எந்த விஷயத்திலும் வாக்குவாதங்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இம்மாதத்தி உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் போராட்டமும், கடின உழைப்பும் நிறைந்த காலமாக இருக்கும். பணியிடத்தில் நிறைய தடைகளை சந்திப்பீர்கள். இருப்பினும் பொறுமை மற்றும் விடாமுயற்சியால் உங்களால் சமாளிக்க முடியும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்காக செலவுகளை அதிகம் செய்யாதீர்கள். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். சமூக வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் வெற்றியைத் தரும் மாதமாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை நிலையானதாக இருக்கும். முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எலும்பு மற்றும் மூட்டுக்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்கள் நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் உங்களுக்கு சவாலானதாக இருக்கும். பணியிடத்தில் போட்டிகள் அதிகரிக்கும். ஆனால் சரியாக திட்டமிட்டால் வெற்றி கிடைக்கும். நிதி ரீதியாக சவாலானதாக இருக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சாதாரணமாக இருக்கும். எவ்வளவு மோசமான சூழ்நிலையை சந்தித்தாலும், மன அழுத்தத்தைத் தவிர்த்து, எதிர்மறை சிந்தனைகளில் இருந்து விலகி இருங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! செப்டம்ர் மாதம் உங்களுக்கு புதிய மாற்றங்களையும், வாய்ப்புக்களையும் கொண்டு வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். நீண்ட கால முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சமநிலையை பேண முயற்சிக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துங்கள். அதே சமயம் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உடற்பயிற்சி மற்றும் தியானத்தில் ஈடுபடுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி விஷயங்களில் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கவும், மன அழுத்தம் குறையவும், தியானம், யோகா போன்றவற்றில் தினமும் சிறிது நேரத்தை செலவிடுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











