ஷ்ராவண மாதத்தில் இந்த 3 ராசியினர் கவனமாக இருக்க வேண்டுமாம்..!

சாஸ்திரங்களின்படி, ஷ்ராவண மாதம் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. குறிப்பாக சிவனுக்கு உகந்த மாதமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. ஆடி அமாவாசையிலிருந்து ஆவணி அமாவாசை வரையுள்ள நாட்கள் ஷ்ராவண மாதமாக கணக்கிடப்படுகிறது.

இந்த ஆண்டு ஷ்ராவண மாதம் ஜூலை 22 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 19 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சிவபக்தர்கள் இந்தக் காலக்கட்டத்தில் கோவில்களிலும் இல்லங்களிலும் பூஜைகள் செய்து, தங்கள் வாழ்வில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்புக்காக சிவனிடம் பிரார்த்தனை செய்வார்கள். ஷ்ராவண மாதத்தில் சிவனை வழிபடுவதில் இன்னொரு மகிமையும் உண்டு. ஷ்ராவண மாதத்தில் செய்யப்படும் பூஜைகள் அற்புதமான பலனைத் தரும். இதில் இதில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரங்கள்

sawan month 2024 these rasi people should careful your self

இந்து தர்மத்தின்படி, ஸ்ராவண மாதம் பன்னிரண்டு மாதங்களில் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் நடக்கும் சில தற்செயல் நிகழ்வுகளால் பல்வேறு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சிலருக்கு அசுப பலன்களும் கிடைக்குமாம்.. அதனால் எந்தெந்த ராசியினர் என்னென்ன பலன்களை பெறுவார்கள்? யாருக்கு அசுப பலன் வரும்? அவர்கள் என்ன பரிகாரம் செய்ய்ணும்? என்பது குரித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ள்லாம் வாங்க..

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எப்போதுமே பொருளாதார ரீதியாக சிறப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கலாம். புதிய வாய்ப்புகள் அமையும் போதும் பணியாளர்கள் தங்கள் பணியில் சிறந்து விளங்குவார்கள். ஆனால் மற்ற நிறுவனங்களுடன் வியாபாரம் செய்யும்போதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். மூத்தவர்கள் உங்கள் பணியில் மகிழ்ச்சி அடைவார்கள். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால் இவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தும், ஏதேனும் பிரச்னை ஏற்படும்.. அப்படி பிச்சனைகளை சந்தித்தால் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்..

பரிகாரம்

துலாம் ராசிக்காரர்கள், சிவனுக்கு வெள்ளைப் பூக்களைக் கொண்டு பூஜை செய்வது நல்லது.. வெள்ளை நிறத்தில் உள்ள பொருட்களை ஏழை மக்களுக்கு தானம் செய்ய வேண்டும், அது உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் மற்றும் பல நன்மைகளை கொண்டு வரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இந்த சிராவண மாதம் நன்மை பயக்கும். ஆனால் அவர் விபத்துகளைத் தவிர்க்க வேண்டும். தொழில் ரீதியாக சிறப்பாக செயல்படலாம். இது உங்களை வெற்றியின் புதிய உயரங்களை அடைய வைக்கும். ஆனால் வேறு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் சிவனுக்கு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்..

பரிகாரம்

விருச்சிக ராசிக்காரர்கள் சிவபெருமானுக்கு சுத்த நீரினால் அபிஷேகம் செய்து, அன்னை பார்வதிக்கு சிவப்பு மலர்களை அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு செயலிலும் வெற்றியைத் தரும்.

தனுசு

ஸ்ராவண மாதம், தனுசு ராசிக்காரர்களுக்கு வயிறு அல்லது அது தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் நிலை ஏற்படலாம்... இதனுடன் உயர் இரத்த அழுத்த நோயிலும் கவனம் செலுத்த வேண்டும். தொழில்முறை வேலையில் வெற்றி உங்களை புதிய உயரங்களை அடைய வைக்கும். அது உங்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தரும். பணியாளர்களுக்கு மேலதிகாரி அல்லது அதிகாரிகளால் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்

தனுசு ராசியினர் வாரம் வாரம் திங்களன்று சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வர பிரச்சனைகள் அனைத்தும் விலகும்..

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, August 14, 2024, 11:57 [IST]
Desktop Bottom Promotion