Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
மார்ச் வரை 2 முறை சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றம்: இந்த 3 ராசிக்கு பணமும், பதவியும் தேடி வரும்...
Saturn's Position Will Change 2 Times Till March 2025: வேத ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலனைத் தரக்கூடியவர் தான் சனி பகவான். கிரகங்களிலேயே இவர் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது இந்த சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சனி பகவான் 2025 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் 2 முறை தனது நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளார். அதில் முதலாவதாக பிப்ரவரி 28 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். அதன் பின் மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மீன ராசிக்குள் நுழையவுள்ளார்.

இப்படி அடுத்தடுத்த மாதத்தில் சனி பகவான் தனது நிலையை மாற்றுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு இம்மாற்றத்தால் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
சனி பகவானின் நிலையில் 2 முறை ஏற்படும் மாற்றத்தால், மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் மார்ச் மாதத்தில் நடக்கும் சனி பெயர்ச்சிக்கு பின், ஏழரை சனியில் இருந்து முழுமையாக விடுபடுவதால், பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். சிலருக்கு வேலையை மாற்றுவதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும் வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் நிறைய லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் வருமானத்தில் பெருமளவில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறலாம். சிலருக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. தொழிலில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் புதிய வீடு, வாகனம் போன்ற சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வீட்டு சூழல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப சண்டைகள் தீரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். தாயுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











