Latest Updates
-
லட்சுமி நாராயண ராஜயோகம்: மே மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
தக்காளியும், கொத்தமல்லியும் இருந்தா.. ஒருடைம் இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 27 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
மீன ராசியில் உருவாகும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: மார்ச் இறுதியில் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது...
Saturn, Venus, Rahu Conjunction Make Trigrahi Yog 2025: வேத ஜோதிடத்தின் படி, மார்ச் மாதமானது மிகவும் சிறப்பானது. ஏனெனில் இந்த மாதத்தில் பல கிரகங்களின் நிலைகளில் மாற்றம் ஏற்படுவதோடு, பல சக்தி வாய்ந்த ராஜயோகங்களும் உருவாகி, மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அதுவும் மார்ச் மாத இறுதியில், அதாவது மார்ச் 29 ஆம் தேதி நீதிமான் சனி பகவானின் ராசி மாற்றம் ஏற்படவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியானது மீன ராசியில் நிகழ்கிறது. இந்த மீன ராசிக்கு சனி பகவான் செல்லும் போது, அந்த ராசியில் பல கிரகங்கள் ஒன்று சேரப்போகின்றன. அதுவும் இந்த ராசியில் சூரியன், சுக்கிரன், புதன், ராகு ஆகிய கிரகங்கள் ஒன்றாக பயணித்து வருகின்றன.

ஆனால் இந்த கிரகங்களில் சுக்கிரன், ராகு மற்றும் சனியின் சேர்க்கை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையால் மீன ராசியில் சக்தி வாய்ந்த திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. அதுவும் மீன ராசியில் இந்த யோகம் உருவாவதால், சில ராசிக்காரர்கள் ஏராளமான நற்பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது மீன ராசியில் உருவாகும் சக்தி வாய்ந்த திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடனுக்காக வங்கியில் முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
வணிகர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தால், அதற்கான வாய்ப்புள்ளது. நிதி நிலைமையில் நல்ல உயர்வு ஏற்படும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பல புதிய வழிகளின் மூலம் பணம் தேடி வரும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். ஏழரை சனியின் கடைசி கட்டம் நடப்பதால், இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் படிபடிப்படியாக குறையும். மேலும் சுக்கிரனின் ஆசியால் வாழ்வில் சந்தித்து வரும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
பணியிடத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். உங்களுக்குள் பல்வேறு மாற்றங்களை காண்பீர்கள். இந்த மாற்றம் உங்கள் வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். உங்களின் தலைமைத்துவ பண்புகள் அதிகரிக்கும். இதனால் வேலை மற்றும் வணிகத்தில் ஏராளமான நன்மைகளைப் பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் ஏராளமான நல்ல பலன்களைப் பெறுவார்கள். அதுவும் சனி பகவான் இந்த வீட்டில் இருப்பது வாழ்க்கையில் அறிவையும் ஒழுக்கத்தையும் தரும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
பணியிடத்தில் உங்களின் வேலை பெரிதும் பாராட்டப்படும். இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வணிகர்கள் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்து வந்தால், நல்ல லாபத்தைப் பெறக்கூடும். முக்கியமாக உடல் மற்றும் மன அழுத்தம் கணிசமாக குறையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications