30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் நிகழும் சனி-சுக்கிர சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பண மழை பொழியப்போகுது..

Saturn Venus Conjunction 2024: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கும். அப்படி கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கும் போது, அதன் தாக்கம் சற்று சிறப்பாக இருக்கும். அந்த வகையில் நீதிமான் சனி பகவானும், செல்வத்தின் காரணியான சுக்கிரனும் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.

தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் சுக்கிரனும் கும்ப ராசியில் நுழைந்து, சனியுடன் இணைந்து பயணிக்கவுள்ளார். இதனால் கும்ப ராசியில் 30 ஆண்டுகளுக்கு பின் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையின் தாக்கம் சற்று சிறப்பானது.

Saturn Venus Conjunction 2024 In Aquarius After 30 Years These Zodiac Signs Luck Will Shine

மேலும் இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் சனி மற்றும் சுக்கிரனின் ஆசியால் செல்வந்தராகும் வாய்ப்பைப் பெறுவார்கள். இப்போது 30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் நிகழும் சனி-சுக்கிர சேர்க்கையால் பணக்காரராகப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்

மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தொடர்பு மேம்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளும், உங்களின் செயல்திறனும் நல்ல பாராட்டைப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மார்கெட்டிங், ஊடகம், வங்கி ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் பெருகும். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வணிகம் செய்பவர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். நிலம், பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அரசு வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல செய்திகளைப் பெறலாம். தாயுடனான உறவு வலுவடையும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி சுக்கிர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிலை தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். முக்கியமாக தந்தையுடன் இதுவரை பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இக்காலத்தில் உங்கள் தந்தையுடனான உறவு வலுவடையும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, October 9, 2024, 10:25 [IST]
Desktop Bottom Promotion