Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
30 ஆண்டுகளுக்கு பின் சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் சனிபகவான்: இந்த 3 ராசிக்காரங்க ராஜா மாதிரி வாழப்போறாங்க!
Saturn Transit In Uthirattathi Nakshatra 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, நட்சத்திரங்களையும் மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான், ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிப்பார். அதே சமயம் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார்.
அந்த வகையில் சனி பகவான் 2025 ஆம் ஆண்டின் ஏப்ரல் 28 ஆம் தேதி தனது சொந்த ராசியான உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் சனி தனது சொந்த நட்சத்திரத்திற்கு செல்லப் போகிறார்.

இந்த சனியின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளார்கள். இதனால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைத் தரப் போகிறது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவார்கள். மேலும் பதவி உயர்வைப் பெறவும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தொழிலில் ரீதியாக நல்ல வெற்றி கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். குழந்தைகளிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சனியின் ஆசியால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம்.
மேஷம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வருமானத்தில் நல்ல அதிகரிப்பைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பான காலமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத அளவில் நிறைய லாபம் கிடைக்கலாம். முதலீடுகளில் இருந்து நிறைய பணத்தைப் பெறலாம். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நிறைய லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. நிதி நிலையில் உயர்வு ஏற்படுவதால், சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடையக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
