Latest Updates
-
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்!
27 ஆண்டுகளுக்கு பின் சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் சனி: ஜூனில் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கபோகுது!
Saturn Transit In Uthirattathi 2nd Stage On June 2025: வேத ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் கும்பம் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். தற்போது இந்த சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் சனி பகவான் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். இந்த நட்சத்திரத்தில் அக்டோபர் 02 வரை இருப்பார்.
இந்நிலையில் சனி பகவான் ஜூன் 07 ஆம் தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் நுழையவுள்ளார். இந்த உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். இந்த நட்சத்திரத்தின் இரண்டாம் கட்டத்திற்குள் சனி பகவான் நுழைவதால் அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதில் சில ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றியை பெறுவதோடு, நிதி நன்மைகளையும் பெறவுள்ளனர். இப்போது சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் நீங்கும். ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்வீர்கள். பணப் பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
கன்னி
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். காதலித்து வந்தால் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
கூட்டு தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். சனி பகவானின் ஆசியால் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு தடையும் நீங்கும். பொறுமையுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
துலாம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். எதிரிகளை வெற்றிகரமாக வீழ்த்துவீர்கள். பணியிடத்தில் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். நீண்ட நாள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சோம்பேறித்தனத்தைக் கைவிட்டால் வெற்றிகளைக் குவிக்கலாம். வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். சனி பகவானின் ஆசியால் கடின உழைப்பின் பலன் கட்டாயம் கிடைக்கும். ஆனால் குடும்ப பிரச்சனைகளை சற்று பொறுமையாகவும், அமைதியாகவும் கையாண்டால், உறவுகளில் விரிசல் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
