Latest Updates
-
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள்
ஏழரை சனியில் இருந்து விடுபட்ட மகர ராசிக்காரர்கள்.. இனிமே இப்படிதான் இருக்கும்.. புட்டுபுட்டு வைக்கும் ஜோதிடர்!
Saturn Transit 2025: வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவானின் ராசி மாற்றம் மார்ச் மாத இறுதியில் நடந்தது. சனிபகவானின் இந்த பெயர்ச்சி மகர ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன்களை தரப்போகிறது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கு ஆவலாக உள்ளதா?
சனி பகவான் வரும் 29ஆம் தேதி முதல் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கியுள்ளார். தனது ஆட்சி வீடான கும்ப ராசியில் இருந்து குரு பகவானின் ராசியான மீன ராசியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பயணத்தை தொடங்கியுள்ள சனிபகவானால், குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.

மகர ராசிக்காரர்கள் மார்ச் 29 ஆம் தேதி முதல் ஏழரை சனியில் இருந்து விடுபட்டுள்ளார்கள். விரையச்சனி, ஜென்மசனி, குடும்ப சனி என உங்களை கடந்த ஏழரை ஆண்டுகாலமாக பாடாய் படுத்தி வந்த சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். உங்களின் கஷ்டங்களும் துயரங்களும் நீங்கி விடிவுகாலம் பிறந்துள்ளது.
உங்கள் ராசி அதிபதியும் இரண்டாம் வீட்டு அதிபதியான சனிபகவான் மூன்றாம் வீட்டில் அமர்வதால் உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். தைரியம் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும். சிறு பயணங்களினால் பலன் கிடைக்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெளிநாட்டு யோகம் கைகூடி வரும்.
ஏழரை சனி காலத்தில் சனி பகவான் கொடுத்த சோதனைகள் மூலம் பல பாடங்களை கற்றுக்கொண்டிருப்பீர்கள். சிலர் சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்திருப்பீர்கள். உங்கள் கஷ்டங்கள் நீங்கி விட்டாலும் நீங்கள் படித்த பாடங்களைக் கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள். இனி நல்ல செய்திகள் உங்களை தேடி வரப்போகிறது. இனி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கொண்டாட்டங்கள் அதிகரிக்கும்.
வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு வேலையில் திருப்தியான நிலை மற்றும் விருப்பமான வேலை, எதிர்பார்த்த வருமானத்துடன் கூடிய வேலை வந்து சேரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் உண்டு. வேலையில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான நிலை தளர்ந்து நற்பலன் உண்டாகும். வெளியூர், அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும். உங்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கும். தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் சேரும். வண்டி வாகனம் வாங்குவீர்கள்.
சனிபகவான் மீன ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், பஞ்சம ஸ்தானம், ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். உங்களுக்கு பணவரவு அதிகரிக்கப் போகிறது. எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். சிலருக்கு பழைய சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் கிடைக்கும். சிலர் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்களாலும், உறவினர்களாலும் நன்மைகள் ஏற்படும்.
பங்கு சந்தை மற்றும் ரேஸ், லாட்டரி, நல்ல லாபகரமாக அமையும். பொருட்களை அடகு வைக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்கள் படிப்பு, வேலை, வெளிநாடு இவைகள் சாதகமாக இருந்து வரும். சம்பாதிக்கும் பணத்தை சுப விரைய செலவுகளாக செய்வீர்கள். இந்த கால கட்டத்தில் பணத்தை கொஞ்சம் சேமித்து வையுங்கள்.
வரும் பணத்தை முறையாக சேமித்தாலே கடனின்றி வாழலாம். யாருக்கும் பணம் கடன் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொடுக்கவும். இல்லாவிட்டால் கொடுத்த பணம் திரும்ப வராது. யாருக்கும் கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். நீரிழிவு, ரத்தகொதிப்பு இருப்பவர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். ஆடை ஆபரணச்சேர்க்கை ஏற்படும். கணவன் மனைவி உறவு சுமூகமாக சந்தோஷமாக இருக்கும். பிள்ளை பாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் சுப காரியங்கள் நடைபெறும். குடும்பத்தில் புதுவரவு உண்டு. உறக்கம் கெடும் உற்சாகத்தோடு செயல்படுங்கள் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு பிறக்கும்.
மாணவர்களுக்கு படிப்பில் அதிகக் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் மனதைச் செலுத்தக் கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் சேர நினைக்கும் உங்களுக்கு நிறைய தடைகள் ஏற்பட்டு விலகும். எதிரிகளால் தொல்லைகள் குறையும். எதையும் தைரியமாக சந்திக்கும் ஆற்றலும் சந்தர்ப்பமும் அமையும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் கைகூடி வரப்போகிறது.
சனிபகவான் உங்களை விட்டு விலகுவதால் குடும்பத்தோடு திருநள்ளாறு சென்று நள தீர்த்த குளத்தில் நீராடி, தர்பாரண்யேஸ்வரரை வழிபட்டு சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வர நன்மைகள் நடைபெறும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
