Latest Updates
-
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
30 ஆண்டுகளுக்கு பின் சனி அமாவாசை நாளில் நடக்கும் சனிப்பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கைமேல் பலன் கிடைக்கும்..
Saturn Transit 2025 On Shani Amavasya After 30 Years: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு பின் மார்ச் 29 ஆம் தேதி, தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்லவுள்ளார். இந்த மீன ராசியில் 2027 ஆம் ஆண்டு வரை சனி பகவான் பயணிப்பார்.
அதுவும் இந்த ஆண்டு நடக்கும் சனிப்பெயர்ச்சியானது சற்று சிறப்பானது. ஏனெனில் இந்நாளில் பல அரிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அதில் ஒன்று சனி அமாவாசை, மற்றொன்று சூரிய கிரகணம். பொதுவாக அமாவாசை தினமானது முன்னோர்களுக்கும், சனி பகவானுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் இது மிகவும் சிறப்பான நிகழ்வாக கருதப்படுகிறது. மேலும் இந்நாளில் தான் 2025 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமும் நிகழவுள்ளது.

இந்த சூரிய கிரகணத்தின் போது சூரியன் மீன ராசியில் இருப்பார். அதே வேளையில் சனி பகவான் மீன ராசிக்கு செல்லவுள்ளார். இப்படியான அரிய நிகழ்வுகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் இந்த நிகழ்வானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது. இப்போது சனி அமாவாசை நாளில் நடக்கும் சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசியின் 7 மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 9 ஆவது வீட்டிற்கு செல்லவுள்ளார். இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட கால பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும். வாழ்க்கையில் ஒரு புதிய நல்ல மாற்றம் ஏற்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக முழுமையடையாமல் நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். மொத்தத்தில் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
கன்னி
கன்னி ராசியின் 5 மற்றும் 6 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், 7 ஆவது வீட்டிற்கு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு காதல் திருமணம் நடக்கும் வாய்ப்புள்ளது. மேலும் இந்த சனிப்பெயர்ச்சியால் சனி பகவான் கன்னி ராசியின் 9, 1 மற்றும் 4 ஆவது வீடுகளின் மீது தனது பார்வையை பதிப்பதால், வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் பணியிடத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 4 மற்றும் 5 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், சனிப்பெயர்ச்சிக்கு பின் 6 ஆவது வீட்டிற்கு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நல்ல பலன்களைப் பெறுவார்கள். நிதி நிலைமை வலுவடையும். தொழிலதிபர்கள் தங்கள் எதிரிகளை சாமர்த்தியமாக தோற்கடித்து வெற்றி பெறுவார்கள். சனியின் நல்ல செல்வாக்கினால் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
மகரம்
மகர ராசியின் முதல் மற்றும் 2 ஆவது வீட்டின் அதிபதியான சனி பகவான், இந்த சனிப்பெயர்ச்சியால் 3 ஆவது வீட்டிற்கு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடவுள்ளார்கள். மேலும் இந்த பெயர்ச்சியினால், 5, 9 மற்றும் 12 ஆவது வீடுகளின் மீது சனி பகவானின் பார்வை விழுகிறது. இதனால் வாழ்க்கையில் இந்த ராசிக்காரர்களின் மரியாதை அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். மொத்தத்தில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
