Latest Updates
-
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க! -
விநாயகர் சதுர்த்திக்கு வழக்கமான சுண்டல் செய்யாம இந்த மாதிரி மசாலா அரைச்சு செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
Ganesh Chaturthi 2026: விநாயகரின் சிறப்பு ஆசீர்வாதத்தைப் பெற்ற 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி நாளில் அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்!
சனி சூரியனால் உருவாகியுள்ள சடாஷ்டக யோகம்: அடுத்த 1 மாதம் இந்த ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Saturn Sun Make Shadashtak Yog 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. இப்படி சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் சூரியன் செப்டம்பர் 16 ஆம் தேதி தனது சொந்த ராசியில் இருந்து விலகி கன்னி ராசியில் நுழைந்தார். சூரியன் கன்னி ராசியில் நுழையும் போது, சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருப்பதால், இவ்விரு கிரகங்களின் நிலையால் மிகவும் ஆபத்தான சடாஷ்டக யோகம் உருவாகியுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். முக்கியமாக பண பிரச்சனையையும், தொழிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது சனி சூரியனால் உருவாகியுள்ள சடாஷ்டக யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சடாஷ்டக யோகமானது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். மேலும் தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏராளமான சவால்களை சந்திக்க நேரிடும். விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
வேலை தொடர்பாக எடுக்கும் எந்த முடிவையும் நன்கு யோசித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. அவசர முடிவு பல சிக்கல்களை உண்டாக்கும். வணிகர்களின் சில முக்கியமான ஆர்டர்கள் இக்காலத்தில் தடைபடலாம். இதனால் பெரிய நிதி இழப்பை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சடாஷ்டக யோகத்தால் முக்கிய வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். தொழிலதிபர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் உயர்அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோருடன் கருத்த வேறுபாடுகளை சந்திக்கலாம்.
சிலருக்கு வேலையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். வியாபாரிகள் பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் வழக்கத்தை விட கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
