Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
30 ஆண்டுகள் கழித்து சனியால் உருவாகும் தன ராஜயோகம்: மீனம் உள்ளிட்ட 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
Saturn Retrograde Make Dhan Rajyog On 13 July 2025: வேத ஜோதிடத்தின் படி நீதிமான் சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். இப்படி ஒரு ராசியில் பயணிக்கும் போது சுமார் 138 நாட்கள் வக்ர நிலையிலும் பயணிப்பார்.
அந்த வகையில் தற்போது சனி பகவான் குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை 13 ஆம் தேதி சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் நவம்பர் 28 ஆம் தேதி வரை இருப்பார்.

சனி பகவான் வக்ரமாவதால், தன ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களைத் தரப் போகிறது. சனி வக்ரமாக இருக்கும் போது சக்தி வாய்ந்தது. இக்காலத்தில் ஏழரை சனி மற்றும் சனியின் பிற தாக்கம் படிப்படியாக குறையும்.
சனி வக்ரமாவதால் உருவாகவுள்ள தன ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களும் கிடைக்கப் போகின்றன. இப்போது சனி வக்ரமாவதால் உருவாகும் தன ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். முடிவெடுக்கும் திறனும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். அதே சமயம் குரு பகவான் 4 ஆவது டீவட்டில் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமாக இருக்கும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நுல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். சிலருக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
சனி வக்ரமாவதால் உருவாகும் தன ராஜயோகத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வேலையை மாற்ற நினைத்தால், இக்காலத்தில் முயற்சிக்கும் போது நல்ல பலன் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். வணிகர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
மகரம்
சனி வக்ரமாவதால் உருவாகும் தன ராஜயோகத்தால் மகர ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். குடும்பத்தினர் மற்றும் உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் ஆசை இருந்தால், அது நிறைவேறும். சிலருக்கு வணிகத்திற்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆன்லைன் வணிகம் மூலம் நிறைய லாபத்தைப் பெறக்கூடும். வெளிநாட்டில் இருந்து பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். முக்கியமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
