Latest Updates
-
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்த படத்துல உங்களுக்கு முதலில் என்ன தெரிஞ்சுது சொல்லுங்க.. உங்க மைண்ட்செட் என்னன்னு சொல்றோம்.. -
உங்க வாயைச் சுற்றி கருப்பா இருக்கா? அப்ப கருப்பு உளுந்து வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
லாப திருஷ்டி யோகத்தால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகுது..! -
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ
சனிபகவான்-ராகு இணைவதால் இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்க வாழ்க்கை நரகமாக மாறப்போகுதாம்... ஜாக்கிரதை...!
ஜோதிடத்தில் சனிபகவானும், ராகுவும் எதிர்மறை பலன்களைத் தரும் கிரகங்களாக கருதப்படுகிறார்கள். மார்ச் 29 ஆம் தேதி சனிபகவான் மீன ராசிக்கு நகர்ந்தார். இதன் விளைவாக, பல நட்சத்திரங்கள் மற்றும் ராசிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. மார்ச் 29 அன்று சனி மீன ராசிக்குள் நுழைந்தபோது, ராகுவும் மீன ராசியில் இருந்தார்.
மே 18 வரை ராகுவும், சனிபகவானும் ஒரே ராசியில் இருக்கிறார்கள். இது சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலன்களை அளிக்கப்போகிறது. அதேசமயம் சில நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் மோசமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களுக்குள் கோபம், பகைமை போன்ற உணர்வுகள் அதிகரிக்கும். இந்த பதிவில் எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிபகவான்-ராகு இணைப்பால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

புனர்பூசம்
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கிரக இணைப்பால் தங்கள் வாழ்க்கையில் பாதகமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அவர்கள் வாழ்க்கையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற மாற்றங்கள் நிகழ்கின்றன. இது அவர்கள் வாழ்க்கையில் பல்வேறு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவர்களின் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் இரண்டிலுமே பின்னடைவுகள் ஏற்படப்போகிறது.
விசாகம்
விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த நேரத்தில் மிகவும் மோசமான பலன்களை சந்திப்பார்கள். இந்த கிரக இணைப்பு அவர்கள் வாழ்க்கையில் பல நெருக்கடிகளை உருவாக்கப்போகிறது. அவர்களுக்கு அதிக நிதி சவால்களை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலை உருவாகிறது. எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு கரையும். அவர்கள் வறுமையிலும் நோயிலும் விழும் வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது.
திருவாதிரை
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை அனுபவிக்கப் போகிறார்கள். இது அவர்கள் வாழ்க்கையை மிகவும் சவாலானதாக மாற்றும் ஒரு சூழ்நிலையில் அவர்களை தள்ளப்போகிறது. ராகு மற்றும் சனியின் மாற்றங்களால் வாழ்க்கையில் ஏற்படும் சிரமங்கள் அவர்களின் மன ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கலாம். எந்தவொரு முடிவையும் அவசரத்தில் எடுக்காமல் இருப்பது நல்லது.
சுவாதி
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகுவும் சனிபகவானும் அவர்கள் வாழ்க்கையில் பல சிரமங்களைத் தரப்போகிறார்கள். இது அவர்களின் வாழ்க்கையில் அதிக சவால்களை உருவாக்கும். நீங்கள் ஒவ்வொரு அடியையும் முன்னோக்கி எடுத்து வைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் முயற்சிகள் உங்களுக்கு எதிர்பார்த்த பலன்களை அளிக்காமல் போகலாம்.
சதயம்
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த கிரக இணைப்பு சாதகமான பலன்களை அளிக்கப்போவதில்லை. அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே பின்னடைவுகளை சந்திக்கப் போகிறார்கள். வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்திலும் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவை அனைத்தும் அவர்களின் வாழ்க்கையில் கடினமான காலகட்டத்தை உருவாக்கப் போகிறது.
பூசம்
பூச நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கை இப்போது தலைகீழாக மாற வாய்ப்புள்ளது. பெரும்பாலும், அனைத்து விஷயங்களும் அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செல்ல வாய்ப்புள்ளது. சில கெட்ட செய்திகள் தேடிவர வாய்ப்புள்ளது. கண்டக சனியின் தீய விளைவுகள் அவர்கள் வாழ்க்கையில் அதிக துக்கத்திற்கும், பிரச்சனைக்கும் வழிவகுக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
