Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Saturn Nakshatra Transit On 7 June 2025: ஜோதிடத்தில் சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. மேலும் சனியின் நிலையில் ஒவ்வொரு முறை மாற்றம் ஏற்படும் போதும் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் தெரியும். நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகம் தான் சனி பகவான் மற்றும் இவர் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியவர்.
சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றினாலும், 6 மாதத்திற்கு ஒருமுறை நட்சத்திரத்தை மாற்றுவார். அந்த வகையில் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டால் பூரட்டாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் ஜூன் 07 ஆம் தேதி பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைந்து பயணிக்கவுள்ளார்.

பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். சொந்த நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வது சிறப்பானது. அதுவும் பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்திற்கு சனி பகவான் செல்வதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். சனி பகவான் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதைகளை காட்டுவார். தொழில் ரீதியாக பல நன்மைகளை வழங்குவார். கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். நீண்ட காலமாக நடந்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கப்படலாம். நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வணிகர்களுக்கு தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
விருச்சிகம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
தொழிலில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலன் கிடைக்கும். நீண்ட காலமாக வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
மகரம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது. ஏற்கனவே ஏழரை சனியில் இருந்து மகர ராசிக்காரர்கள் விடுபட்டுள்ள நிலையில், இந்த சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளைத் தரப்போகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
சொந்த நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வதால் பல மடங்கு நன்மைகளைப் பெறக்கூடும். அதுவும் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். ஒவ்வொரு பிரச்சனைக்கும் புத்திசாலித்தனமாக யோசித்து தீர்வு காண்பார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக, நல்ல முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
