சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன?

Saturn Nakshatra Transit 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் நீதி, நேர்மை, ஒழுக்கம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றி மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். அதோடு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அக்டோபர் 09 ஆம் தேதி முதல் வக்ர நிலையில் பயணித்து வருகிறார்.

Saturn Nakshatra Transit 2026 These Zodiac Signs Will Be Lucky Until February 2027

இந்த நட்சத்திரத்தில் பிப்ரவரி 2027 ஆம் ஆண்டு வரை, சுமார் 118 நாட்களுக்கு இருப்பார். சனி பகவானின் இந்த நிலையின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 5 ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நல்ல அதிர்ஷ்டத்தை, தொழிலில் முன்னேற்றத்தை, நிதி நிலையில் நல்ல உயர்வை வழங்கப் போகிறார். இப்போது சனி நட்சத்திர பெயர்ச்சியால் 2027 பிப்ரவரி வரை நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

சனி நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் அனைத்தும் இக்காலத்தில் கிடைக்கும்.

மிதுனம்

சனி நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். குறிப்பாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமான வேலைகள் இதுவரை தடைபட்டு வந்தால், சனி பகவானின் அருளால் அந்த தடைகள் நீங்கி, நிலைமை மேம்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் கடின உழைப்பு பாராட்டப்படும். இருந்தாலும் இக்காலத்தில் எந்த ஒரு பெரிய முடிவை எடுப்பதாக இருந்தாலும், அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

துலாம்

சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியைக் காணக்கூடும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இக்காலத்தில் வேலையை முழு அர்ப்பணிப்புடன் செய்தால் நல்ல பலனைப் பெறலாம்.

மகரம்

சனி நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதுவரை மன அழுத்தத்துடன் இருந்து வந்திருந்தால், வாழ்வில் நிம்மதி கிடைக்கும். முக்கியமாக நிதி நிலைமை வழக்கத்தை விட வலுவடையும்.

கும்பம்

சனி நட்சத்திர பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுவும் கடினமாக உழைத்தால், ஒவ்வொரு முயற்சிக்கும் சனி பகவான் நல்ல பலனைத் தருவார். இதுவரை வேலையில் தடைகளை சந்தித்து வந்தால், இக்காலத்தில் அந்த தடைகள் நீங்கி முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கஷ்டங்கள் குறையும். இருந்தாலும் ஏழரை சனி நடந்து கொண்டிருப்பதால், நற்பலன்களில் சில தாமதங்கள் ஏற்படலாம். ஆனால் நிச்சயம் நல்ல பலனைப் பெறக்கூடும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, October 15, 2026, 11:15 [IST]
Desktop Bottom Promotion