Latest Updates
-
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது!
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
Saturn Nakshatra Transit 2026: ஜோதிடத்தில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலனைத் தரக்கூடியவர் தான் சனி பகவான். இதனால் இந்த சனி பகவானை நீதிமான் என்றும் அழைப்பர். மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார் மற்றும் அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். இப்படி சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போது அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். முக்கியமாக இதுவரை ரேவதி நட்சத்திரத்தில் பயணித்து வந்த சனி பகவான் அக்டோபர் 09 ஆம் தேதி, அதாவது இன்று வக்ர நிலையில் தனது சொந்த ராசியான உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். சனி பகவானின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
இருப்பினும், 5 ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் தங்களின் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவதோடு, வேலைகளில் உள்ள தடைகள் நீங்கி வெற்றிகளைப் பெறுவார்கள். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இப்போது சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் பண பிரச்சனைகள் படிப்படியாக குறையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவுக்கு வரும். முக்கியமாக முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிதுனம்
சனி நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். வணிகர்கள் தங்கள் நிலுவையில் உள்ள திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல உகந்ததாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலன்களை பெறுவார்கள்.
கன்னி
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் சாதகமாக இருக்கும். வேலையில் பரபரப்பாக இருந்தாலும், குடும்ப மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்காக நேரத்தை ஒதுக்க வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் பயனுள்ளதாக இருக்கும். உயர்கல்விக்குத் தயாராகும் மாணவர்கள், தங்கள் கடின உழைப்பின் மூலம் நேர்மறையான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக உங்களின் இலக்குகளை இக்காலத்தில் அடைவீர்கள்.
துலாம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மங்களரமானதாக இருக்கும். இக்காலத்தில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு உயர் அதிகாரிகளால் கவனிக்கப்பட்டு பாராட்டப்படும். நீண்ட காலமாக தொழிலில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
மகரம்
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு இன்று முதல் பொற்காலமாக இருக்கும். இதுவரை தடைபட்டு வந்த அல்லது தள்ளி போன வேலைகள் இனி நல்லபடியாக நடக்கும். வெளிநாட்டுப் பயணம் செய்யத் திட்டமிடுபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கலாம். வெளிநாட்டில் தொழில் தொடங்க அல்லது முயற்சி செய்யத் திட்டமிடுபவர்களுக்கும் இக்காலம் சாதகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



