72 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் வக்ர நிலையில் இருக்கும் 4 கிரகங்கள்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரபோகுது!

Saturn Mercury Rahu Ketu Vakri After 72 Years: நவகிரகங்களின் இயக்கங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, வக்ர நிலையில் பின்னோக்கியும் பயணிக்கும். அப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை உண்டாக்கும்.

அந்த வகையில் ஜூலை மாதத்தில் ஒரு அரிய தற்செயல் நிகழ்வு நிகழவுள்ளது. அதாவது 4 கிரகங்கள் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளன. அதில் ஜூலை 13 ஆம் தேதி சனி வக்ரமாகவுள்ளார். அதன் பின் ஜூலை 17 ஆம் தேதி புத்திகாரகன் புதன் வக்ரமாகவுள்ளார். அதே வேளையில் ஏற்கனவே ராகுவும், கேதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகின்றன. இப்படி 4 கிரகங்கள் ஒரே வேளையில் பின்னோக்கி நகரும் நிகழ்வு சுமார் 72 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.

Saturn Mercury Rahu Ketu Vakri After 72 Years List Of Lucky Zodiac Signs

இதனால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக பதவி உயர்வு, வருமானத்தில் உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அதோடு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கப் போகின்றன. இப்போது 72 ஆண்டுகளுக்கு பின் 4 கிரகங்கள் ஒன்றாக வக்ர நிலையில் பயணிப்பதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

4 கிரகங்கள் வக்ரமாக இருப்பது கடக ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். அதுவும் திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். தொழிலில் புதிய திட்டங்களால் புதிய உயரங்களை அடைவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் மற்றும் தகவல் தொடர்பு திறன் மேம்படும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

ரிஷபம்

4 கிரகங்கள் வக்ரமாக இருப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு பலவிதமான சாதகமான பலன்களைத் தரும். குறிப்பாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பளவு உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. திருமணமாகாதவர்கள் மனதிற்கு பிடித்த துணையை சந்திப்பார்கள். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மிகவும் பிரபலமாக இருப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

மீனம்

4 கிரகங்கள் வக்ரமாக இருப்பது மீன ராசிக்காரர்களை கடனில் இருந்து விடுவிக்கும். புதிய முதலீடுகளை செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டம் நிறைவேறும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்க நல்ல வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, July 7, 2025, 9:10 [IST]
Desktop Bottom Promotion