Latest Updates
-
ஆகஸ்ட் 11-ல் குரு-சந்திர சேர்க்கையால் நிகழும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்
30 ஆண்டுகளுக்கு பின் சனி-புதனால் உருவாகும் சக்திவாய்ந்த யோகம்: இந்த 3 ராசியின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
Saturn Mercury Make Pratiyuti Yog On 17 September 2025: ஜோதிடத்தின் படி நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் இருப்பார். நீண்ட காலம் ஒரு ராசியில் சனி பகவான் இருப்பதால், சனியின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் ஆழமாக தெரியும்.
இப்படிப்பட்ட சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் உள்ளார். இந்த மீன ராசியில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார். இப்படி நீண்ட காலம் இருப்பதால், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குவார்.

அந்த வகையில் சனி பகவான் புதனுடன் சேர்ந்து பிரதியுதி யோகத்தை உருவாக்கவுள்ளார். அதுவும் இந்த யோகமானது செப்டம்பர் 17 ஆம் தேதி உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் போது சனியும், புதனும் ஒருவருக்கொருவர் 180 டிகிரியில் இருப்பார்கள். இந்த சக்தி வாய்ந்த யோகமானது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் மிகவும் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர். இப்போது சனி மற்றும் புதனால் உருவாகும் பிரதியுதி யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி மற்றும் புதனால் உருவாகும் பிரதியுதி யோகமானது சிறப்பான பலன்களைத் தரப்போகிறது. முக்கியமாக வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். தேவையற்ற செலவுகள் குறையும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முக்கியமாக நீண்ட நாள் கனவு இக்காலத்தில் நிறைவேறும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் பிரதியுதி யோகத்தால் வாழ்வில் பல பகுதிகளில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அதுவும் சனி பகவான் முதல் வீட்டில் இருப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். நீண்ட காலமாக இருந்த பெரிய பிரச்சனை முடிவுக்கு வரும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக உணர்வீர்கள். மனதில் மகிழ்ச்சி பெருகும். ஆனால் எந்த வேலையையும் அவசரப்பட்டு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த வேலை பெரிய இழப்பை ஏற்படுத்தும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மகரம்
சனி மற்றும் புதனின் சேர்க்கையால் உருவாகும் பிரதியுதி யோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரப் போகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். தொழில் ரீதியாக நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். முக்கியமாக நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications