Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சனி-புதனால் உருவாகும் கேந்திர யோகம்: ஜூன் 09 முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்..
Saturn Mercury Make Kendra Yog On 09 June 2025: வேத ஜோதிடத்தின் படி, சனி ஒரு கொடிய கிரகமாக கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் சனி ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலனையே தருவார். மேலும் கிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார்.
தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார். இக்காலகட்டத்தில் சனி பகவான் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து அவ்வப்போது யோகங்களை உருவாக்கி, மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவார். அந்த வகையில் சனி பகவான் ஜூன் 09 ஆம் தேதி சக்தி வாய்ந்த யோகத்தை உருவாக்கவுள்ளார்.

அதுவும் சனி பகவான் புதனுடன் சேர்ந்து கேந்திர யோகத்தை உருவாக்க போகிறார். இந்த யோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். அதில் சில ராசிக்காரர்கள் ஏராளமான நன்மைகளைப் பெறவுள்ளனர்.
ஜோதிடத்தின் படி, சனியும், புதனும் ஜூன் 09 ஆம் தேதி 90 டிகிரியில் இருப்பார்கள். இதனால் கேந்திர யோகம் உருவாகவுள்ளது. இந்த நேரத்தில் சனி மீன ராசியிலும், புதன் மிதுன ராசியிலும் இருப்பார்கள். இப்போது சனி புதன் நிலைகளால் உருவாகும் கேந்திர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகமானது அதிர்ஷ்டத்தைத் தரப் போகிறது. அதுவும் இந்த யோக காலத்தில் சனியின் செல்வாக்கு அதிகமாக இருக்கும். மேலும் புதனின் ஆசியால் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நிறைய பணத்தை சேமிக்க முடியும். வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு நல்ல நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. எம்என்சி-யில் பணிபுரிபவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகமானது நல்ல மகத்தான வெற்றியைத் தரும். நிதி விஷங்களில் நல்ல நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள் படிப்பில் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். எழுத்து துறையில் இருப்பவர்கள் நிறைய நன்மைகளைப் பெறுவார்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். பேச்சால் பல முக்கியமான வேலைகளை செய்து முடிப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பற்றிய கவலை நீங்கும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
