Latest Updates
-
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா?
சனி உருவாக்கிய சச ராஜயோகத்தால் 2025 வரை இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Saturn Made Shash Rajyog: ஜோதிடத்தில் சனி மிகவும் கொடூரமானவராக கருதப்படுகிறார். ஆனால் உண்மையில் சனி பகவான் அப்படிப்பட்டவர் அல்ல. இவர் பாரபட்சம் பாராமல் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பார். இதனால் இவரிடம் இருந்து தப்பிக்க முடியாது. சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். இதனால் இவர் ஒரு ராசி சுழற்சியை முடிக்க 30 ஆண்டுகள் ஆகும்.
தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். சொந்த ராசியில் சனி நுழைந்ததால், பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச மகாபுருஷ ராஜயோகம் உருவாகியள்ளது. இந்த ராஜயோகம் மங்களகரமானதாக இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வரை மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது சச மகாபுருஷ ராஜயோகத்தால் 2025 ஆம் ஆண்டு வரை எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சச ராஜயோகத்தால் அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். உங்கள் குழந்தைகளுடைய எதிர்காலம் பற்றிய பதற்றம் குறையும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். ஷேர் மார்கெட் மூலம் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சச ராஜயோகமானது பல நல்ல பலன்களை அளிக்கும். முக்கியமாக நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வேலையில் நல்ல வெற்றியைப் பெறுவீர்க்ள. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் வேலை நல்ல பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் முயற்சிகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் எப்பேற்பட்ட சவால்களையும் எளிதில் சமாளித்து வெற்றி காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். வேலையை மாற்ற நினைத்தால், அதற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை இக்காலத்தில் எளிதில் அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications