Latest Updates
-
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
30 ஆண்டுகள் கழித்து சனிபகவானால் உருவாகியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகம்: அதிர்ஷ்ட ராசிக்காரங்க இவங்க தான்!
Kendra Trikona Rajyog 2025: வேத ஜோதிடத்தில் சனி மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. மற்ற கிரகங்களை விட சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியதால், சனியின் தாக்கம் ஒருவரது வாழ்க்கையில் அதிகமாக தெரியும். அதுவும் சனி பகவான் நீதிமான், ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன்களை தவறாமல் அளிக்கக்கூடியவர்.
ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றின் காரணியான சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றினாலும், அவ்வப்போது தனது நிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்துவார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். 30 ஆண்டுகளுக்கு பின் மீன ராசிக்குள் நுழைந்துள்ள சனி பகவான், இந்த ராசியில் 2027 ஆம் ஆண்டு ஜூன் வரை இருப்பார்.

அதன் பின் மேஷ ராசிக்குள் நுழைவார். சனி பகவான் மீன ராசியில் நுழைந்துள்ளதால், 30 ஆண்டுகளுக்கு பின் சனிபகவானால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது 10 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றை பெற வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம், நிலம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது 3 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் பிடியில் இருந்தும் விடுதலை கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் தங்கள் வேலைகளில் தடைகளை சந்தித்துக் கொண்டிருந்தவர்களுக்கு, அந்த தடைகள் விலகும். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். புதிய திட்டங்களில் நல்ல வெற்றி கிடைக்கும். இக்காலத்தில் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. சனி பகவான் முதல் வீட்டில் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் முடிவடைந்து, இரண்டாம் கட்டம் தொடங்கியுள்ளது. மறுபுறம் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளதால், வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வீட்டில் செல்வம் பெருகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அரசியலில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
