Latest Updates
-
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
சனி-கேதுவால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகத்தால் அடுத்த 2 மாதம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
Saturn Ketu Made Shadashtak Yog 2025: வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிடத்தில் உள்ள நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அதில் நீதிமான் சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதே சமயம் நிழல் கிரகமாக கருதப்படும் கேது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இதனால் சனி மற்றும் கேதுவின் நிலைகளால் ஒரு சிறப்பான யோகம் உருவாகியுள்ளது. அது தான் ஷடாஷ்டக யோகம்.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகமானது சிறப்பான பலன்களை தரவுள்ளது. இப்போது சனி கேதுவின் ஷடாஷ்டக யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை பாருஙகள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது நம்பிக்கையையும், ஆற்றலையும் தரும். இதனால் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் அடுத்த 2 மாத காலத்திற்கு கிடைக்கும். ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்து வருவீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண சில புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக சிலருக்கு திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் ஷடாஷ்டக யோகத்தால் வேலையில் வெற்றி பெறுவார்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கையில் செல்வம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக யோகமானது தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வரும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு அதரவு கிடைக்கும். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால் வெற்றிகள் குவியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
