Latest Updates
-
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க!
27 ஆண்டுகளுக்கு பின் குருபகவானின் நட்சத்திரத்திற்கு சென்றுள்ள சனிபகவான்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்!
Saturn Enters Jupiters Pooratathi Nakshatra: ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதை தவிர, நட்சத்திரங்களையும் மாற்றுகின்றன. இவ்வாறு கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருவதோடு, தேவர்களின் குருவான குருபகவானின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணித்து வருகிறார்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் நுழைந்து பயணித்து வருகிறார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வெற்றிகள் குவிவதோடு, நிறைய லாபமும் கிடைக்கவுள்ளது. இப்போது பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணித்து வரும் சனி பகவானால் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்
துலாம்
பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பயணித்து வருவதால் துலாம் ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நண்பர்களுடனான உறவு மேம்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் தேடி வரும். ஆடம்பரமான பொருட்களை வாங்குவீர்கள். செல்வம் பெருகும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
தனுசு
பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணித்து வருவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி காண்பார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
கும்பம்
சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணித்து வருவதால் கும்ப ராசிக்காரர்களுக்கு இன்னும் சில காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், பிணைப்பும் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். வாழ்க்கையை மாற்றும் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஏற்கனவே செய்த ஒப்பந்தங்களில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
