Latest Updates
-
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தீபாவளிக்கு பின் சனி பகவானின் அருளால் இந்த 3 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு.. உங்க ராசி என்ன?
Saturn Direct In Aquarius After Diwali 2024: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். ஏனெனில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ற பலன்களைத் தருபவர். இந்த சனி பகவான் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாவார். தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
அதுவும் ஜூன் மாதத்தில் இருந்து சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் இந்த ஆண்டின் தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார். சனியின் இந்த மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

முக்கியமாக சனி வக்ர நிவர்த்தி அடைவதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருப்பதோடு, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, பணக்காரராகும் யோகம் உள்ளது. இப்போது கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் சனியால் தீபாவளிக்கு பின் எந்த ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்புள்ளது என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதன் விளைவாக இந்த ராசிக்காரர்களுக்கு தீபாவளிக்கு பின் ரொம்பவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. மேலும் நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும். இதன் காரணமாக நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் நீண்ட காலமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை தேடி வரும். பணிபுரிபவர்கள் நல்ல சம்பளத்துடன் ஒரு புதிய வேலை வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நிதி ரீதியாக தீபாவளிக்கு பின் சிறப்பாக இருக்கும். அதுவும் எதிர்பாராத அளவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செய்யும் வேலைகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலதிபர்கள் கடனாக கொடுத்த பணத்தைப் பெறுவார்கள். இக்காலத்தில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பேச்சால் பல வேலைகளை முடிப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இநத ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். மேலும் தீபாவளிக்கு பின் ஒரு பெரிய தொகையைப் பெறுவீர்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழிலதிபர்கள் கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். முக்கியமா புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
