Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும்
அடுத்தடுத்த நாட்களில் நிகழும் சனி, சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது..
Saturn Direct and Sun Transit On November 2024: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது சூரியன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார்.
மறுபுறம், கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். இந்த சனி 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சனி தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 15 ஆம் தேதி சனி கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார்.

அதற்கு மறுநாள் நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்கு செல்லவுள்ளார். இப்படி அடுத்தடுத்த நாட்கள் சூரியன் மற்றும் சனியின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். என்ன தான் சூரியன் மற்றும் சனி பகவானுக்கு இடையே தந்தை மகன் உறவு இருந்தாலும், இவ்விரு கிரகங்களும் எதிரிகளாக கருதப்படுகின்றனர்.
அடுத்தடுத்த நாட்களில் சூரியன், சனியின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அடுத்தடுத்து நிகழும் சனி, சூரிய பெயர்ச்சிகளால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மிதுனம்
அடுத்தடுத்து நிகழும் சனி, சூரிய பெயர்ச்சிகளால் மிதுன ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவதோடு, நல்ல நிதி ஆதாயங்களையும் பெறுவார்கள். சிலருக்கு திடீரென்று பணம் தேடி வரும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாக பலவிதமான நன்மைகளைப் பெறுவார்கள். எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.
மேஷம்
அடுத்தடுத்து நிகழும் சனி, சூரிய பெயர்ச்சிகளால் மேஷ ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறவுள்ளார்கள். முக்கியமாக பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படலாம். ராகு 12 ஆவது வீட்டில் இருப்பதால், அவ்வப்போது நிதி நிலையில் மாற்றம் ஏற்படலாம். குருவின் அருளால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தொழில் ரீதியாக நிறைய நன்மைகளை பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம்.
கன்னி
அடுத்தடுத்து நிகழும் சனி, சூரிய பெயர்ச்சிகளால் கன்னி ராசிக்காரர்களின் நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணியிடத்தில் நிறைய வெற்றிகளைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். போட்டியாளருக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய வாகனம், சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
