Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
500 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சனி, குருவின் அபூர்வ நிலை: இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். ஏனெனில் இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இவர் கும்பம் மற்றும் மகர ராசிகளின் அதிபதியாவார். இந்த சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சனி பகவான் நவம்பர் மாதத்தில் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்கதியில் பயணிக்கவுள்ளார்.
அதே வேளையில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிதுன ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் குரு பகவான் கடக ராசிக்குள் நுழைவுள்ளார். அதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் குரு பகவான் கடக ராசியில் வக்ரமாகவுள்ளார்.

இப்படி நவம்பர் மாதத்தில் சனி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியிலும், குரு வக்ரமாகி பின்னோக்கிய நிலையிலும் இருப்பர். இந்த கிரகங்களின் நிலைகளின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும். முக்கியமாக சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைத் தருவதாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
துலாம்
நவம்பர் மாதத்தில் குரு மற்றும் சனியின் அரிய நிலையால் துலாம் ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறக்கூடும். தொழிலதிபர்கள் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவார்கள். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
கும்பம்
நவம்பர் மாதத்தில் குரு மற்றும் சனியின் அரிய நிலையால் கும்ப ராசிக்காரர்கள் அவ்வப்போது திடீர் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு வலுவடையும். பணிபுரிபவர்கள் புதிய பொறுப்புக்களைப் பெறுவார்கள். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். முக்கியமாக இக்காலத்தில் உங்களின் எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெறுவீர்கள்.
மிதுனம்
நவம்பர் மாதத்தில் குரு மற்றும் சனியின் அரிய நிலையால் மிதுன ராசிக்காரர்கள் அவ்வப்போது திடீர் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காணும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். எண்ணெய் மற்றும் இரும்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
