Latest Updates
-
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்..
கேந்திர திரிகோண மற்றும் சமசப்தக் ராஜயோகங்களால் இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Samsaptak And Kendra Trikon Rajyoga: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப மற்றும் ராஜயோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது புதனும், சுக்கிரனும் சிம்ம ராசியில் ஒன்றிணைந்து பயணித்து வருகின்றனர். இவர்களுக்கு எதிராக சனி பகவான் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இதனால் சமசப்தக் ராஜயோகம் உருவாகியுள்ளது. அத்துடன் மூன்று கிரகங்களால் கேந்திர திரிகோண ராஜயோகமும் உருவாகியுள்ளது.

இப்படி இவ்விரு ராஜயோகங்களும் ஒரே வேளையில் உருவாகியுள்ளதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நல்ல நிதி ஆதாயங்களும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இவ்விரு ராஜயோகங்களால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களின் ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இக்காலத்தில் முதலீடுகளை செய்தால், அது எதிர்காலத்தில் நல்ல நிதி நன்மைகளைத் தரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சமசப்தக் மற்றும் கேந்திர திரிகோணம் ஆகிய இவ்விரு ராஜயோகங்களும் அதிர்ஷ்டத்தைத் தரும். முக்கியமாக இக்காலத்தில் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும். பணியிடத்தில் சிலர் புதிய பொறுப்புக்களைப் பெறலாம். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்த எவ்வளவு பணத்தை செலவழித்தாலும், அது இரட்டிப்பு லாபத்தைத் தரும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இவ்விரு ராஜயோகங்களும் வெற்றிகளையும், பணத்தையும் குவிக்கும். மேலும் அனைத்து துறைகளிலும் இலக்குகளை அடைவீர்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications