Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
2025-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Rahu Transit In Aquarius 2025: வேத ஜோதிடத்தில் ராகு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. கிரங்களிலேயே ராகு பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர் மற்றும் இந்த ராகுவிற்கு சொந்தமான ராசி என்று எதுவும் இல்லை. இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். இதனால் ராகுவின் நிலையில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இப்படிப்பட்ட ராகு தற்போது குரு பகவானின் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2025 ஆம் ஆண்டின் மே மாதத்தில் ராகு, சனி பகவானின் கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். கும்ப ராசியில் ராகு நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த கும்ப ராசியில் ராகு 2026 ஆம் ஆண்டின் டிசம்பர் 05 ஆம் தேதி வரை இருப்பார். இப்போது கும்ப ராசிக்கு ராகு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சிறப்பான மாற்றத்தைக் காணவுள்ளனர் என்பதைக் காண்போம்.
மேஷம்
2025-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடைவதோடு, ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத அளவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
தொழில் ரீதியாக பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ராகுவின் ஆசியால் வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலை வலுவடையும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கன்னி
2025-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு ராகு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இருந்த பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு தேடி வரும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் சிறப்பான செயல்திறனால் பெற்ற வெற்றின் பெருமையை மற்றவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடும் என்பதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
2025-ல் நடக்கும் ராகு பெயர்ச்சியால் தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு ராகு செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வெற்றிக் கதவுகள் திறக்கும். எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதன் மூலம் நிறைய நிதி நன்மைகளும் கிடைக்கம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
பணியிடத்தில் கொடுக்கப்பட்ட இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். இருப்பினும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அலுவலகத்தில் உங்களைச் சுற்றியிருப்பவர்கள் உங்களின் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொண்டு, உங்களை தவறாக வெளிக்காட்டலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications