Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு-சந்திர சேர்க்கை: இந்த 3 ராசிக்கு பண இழப்பு ஏற்படப்போகுது.. உஷாரா இருங்க..
Rahu Moon Conjunction Make Grahan Yog On 16 June 2025: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதுடன், மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. அதன் தாக்கமும் மனித வாழ்க்கையில் அவ்வப்போது தெரியும்.
அந்த வகையில் ஜூன் 16 ஆம் தேதி ஒரு மோசமான யோகம் உருவாகவுள்ளது. அது தான் கிரகண யோகம். இந்த யோகமானது 18 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் உருவாக போகிறது. அதுவும் இந்த யோகம் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகவுள்ளன. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருந்தாலும், இன்னும் சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரிக்கும். அதுவும் பண இழப்பு, ஆரோக்கிய பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. இப்போது ராகு சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணத்தின் போது உடைமைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். வணிகர்கள் இக்காலத்தில் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வேலைப்பளுவை சந்திக்கலாம். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பு புறக்கணிக்கப்படும். உங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் ராகு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனையில் சிக்கிக் கொள்ளக்கூடும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் ஏதாவது ஒரு விஷயத்தில் பிரச்சனை ஏற்படலாம். இதன் காரணமாக மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் ராகு சந்திர சேர்க்கையால் கிரகண யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் இரண்டையும் சரியாக நிர்வகிக்க முடியாமல் அவதிப்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணம் கைக்கு திரும்ப வராது. கூட்டு தொழில் செய்பவர்கள் இழப்புக்களை சந்திக்க நேரிடும். முக்கியமாக முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
