Latest Updates
-
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
Personality Test: அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல மற்றும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா? -
நீரிழிவு நரம்பியல் பாதிப்பு என்றால் என்ன? அதன் ஆரம்ப கால அறிகுறிகள் என்ன? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், வேர்க்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 01 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களின் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் துலாம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
Mahalaya Paksha 2026: மகாளய பட்ச காலத்துல வீட்டுக்கு இந்த 5 உயிரினங்கள் வந்தா அதிர்ஷ்டமாம்.. விரட்டாதீங்க.. -
October Month Rasi Palan 2026: அக்டோபர் மாதம் மேஷம் முதல் கன்னி வரை எப்படி இருக்கும்? ஜோதிடர் கணிப்பு! -
டீக்கடை ஸ்டைல் கடலை மாவு போண்டா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடற்பயிற்சியின் போது மயக்கம் ஏன் வருகிறது? அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகளை கூறும் இதய மருத்துவர்!
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஜோதிட சாஸ்திரத்தில் ராகு மற்றும் கேது இரண்டும் நிழல் கிரகங்களாக அறியப்படுகின்றன. பொதுவாக இந்த கிரகங்கள் எதிர்மறையான விளைவுகளை தரக்கூடியவையாக கருதப்படுகிறது. இவை பாரம்பரியமாக முற்றிலும் மாறுபட்ட ஆற்றல்களுடன் தொடர்புடையவையாகக் கருதப்படுகின்றன. கேது ஆன்மீகம் மற்றும் ஆசைகளை துறப்பதுடன் தொடர்புடையது. அதேசமயம் ராகு திடீர் மாற்றங்கள், லட்சியம் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளுடன் தொடர்புடையது. இந்த இரண்டு முரண்பட்ட பண்புகள் காரணமாக, அவற்றின் நகர்வுகள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

தற்போது ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் சஞ்சரித்து வருகின்றனர். இந்த ஆண்டின் பிற்பகுதியில், ராகு மகர ராசிக்கும் கேது கடக ராசிக்கும் என தங்கள் ராசியை மாற்ருக்கின்றன. இந்த கிரக மாற்றங்கள் குறிப்பிட்ட ராசிகளின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே பின்னடைவை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் அவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த கிரக மாற்றங்களின் விளைவுகள் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் ராகு-கேது பெயர்ச்சியால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிந்து கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வேலையில் கவனக்குறைவாக இருப்பதோ அல்லது முக்கியமான முடிவுகளை அவசரமாக எடுப்பதோ சிக்கல்களை உருவாக்கக்கூடும். புதிய முயற்சியை மேற்கொள்ளவோ அல்லது புதிய பொறுப்புகளை ஏற்கவோ திட்டமிட்டிருந்தால், நிதானமாக ஆலோசித்து பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். எந்தவொரு வேலையையும் கடைசி நிமிடம் வரை ஒத்திவைக்காமல், சரியான நேரத்தில் முடிக்க முயலுங்கள்.
பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரத்தையாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் மற்றவர்களுக்கு அவர்கள் மீதிருக்கும் நம்பிக்கை குறையும். சில ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். திருமண உறவிலும் சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் கடினமான காலத்தை எதிர்கொள்ளலாம். சர்ச்சைக்குரிய சூழல்கள் ஏற்படக்கூடும் என்பதால், தேவையற்ற வாக்குவாதங்கள் அல்லது மோதல்களைத் தவிர்ப்பது நல்லது. அரசு சார்ந்த பணிகளில் தாமதங்கள் அல்லது புதிய தடைகள் ஏற்படலாம். அதேவேளையில், குடும்ப வாழ்க்கையில் நிலவும் பதற்றம் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். விருச்சிக ராசியினரைப் பொறுத்தவரை, இக்காலம் பொறுமை மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்கான ஒரு சோதனைக் காலமாக அமைகிறது.
இந்த காலகட்டத்தில் அவர்களின் தைரியம் அதிகரிக்கும், ஆனால் எந்த பணியையும் முடிக்க அவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழில்ரீதியாக, இந்த காலகட்டம் அவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம், மேலும் தேவையற்ற அலைச்சலை சந்திக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் வியாபாரிகள் ஒரு மந்தமான காலகட்டத்தை அனுபவிக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சிறிய ஆரோக்கியப் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதோ அல்லது அலட்சியமாக இருப்பதோ சிக்கல்களை உருவாக்கக்கூடும். மற்றவர்களுடன் பழகும்போதுவார்த்தைகளை சரியாகப் பயன்படுத்தவும். முன்பின் தெரியாதவர்களை அதிகமாக நம்புவது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அதேசமயம், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பணியிடத்திலோ அல்லது தொழிலிலோ பொறுமை காப்பது அவசியமாகும். இந்த காலகட்டத்தில் சில மருத்துவ செல்வுகள் அவர்களின் பாக்கெட்டை பதம் பார்க்கும். பெரும்பாலும் அவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் எதிர்பாராத தடைகள் ஏற்படும். முக்கிய விஷயம் என்னவென்றால், இது நிதிரீதியாக நல்ல நேரம் அல்ல.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

