Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு ஒருவாட்டி இந்த அம்மிணி கொழுக்கட்டையை ட்ரை பண்ணி பாருங்க.. -
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்..
ராகு-கேது பெயர்ச்சி 2026: துலாம் முதல் மீனம் வரை யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?- விளக்கும் ஜோதிடர்!
Rahu Ketu Peyarchi 2026 Palangal In Tamil: ஜோதிடத்தில் ராகு-கேது ஆகிய இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்களாவர். இந்த இரண்டு கிரகங்களுக்கும் மற்ற கிரகங்களைப் போல் சொந்த ராசி எதுவும் இல்லை. இருப்பினும்ராகுவும் கேதுவும் எந்த ராசியில் இருக்கிறார்களோ அதுவே அவர்களின் வீடு. இப்படிப்பட்ட ராகுவும், கேதுவும் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார்கள். அந்த வகையில் 2026 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 8:03 மணிக்கு ராகு மற்றும் கேது ஆகிய இருவரும் தங்கள் ராசிகளை மாற்றப் போகிறார்கள்.

அப்பெயர்ச்சியால் ராகு சனி பகவானைப் போலவும், கேது பகவான் சந்திரனைப் போலவும் செயல்படுவார். இப்படி ராகு-கேதுவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும். அதில் ஏற்கனவே மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்த்துவிட்டோம். இப்போது துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையிடம் பகிர்ந்து கொண்டார். அதை அறிய தொடர்ந்து படியுங்கள்.
துலாம்
"துலாம் ராசியின் ராகு பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிலும், கேது பகவான் தொழில் ஸ்தானமான 10 ஆம் வீட்டிலும் பயணம் செய்யப் போவதால் உங்களுடைய பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். ராகு பகவான் பூமி, வீடு, வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார்.
பழைய கடன்கள் அடைப்படும். புதிய கடன் வாங்கி சுப காரியம், திருமணம், பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்ய நேரிடும். வரவுகள் அதிகரிக்கும் சேமிப்பும் உயரும். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்" என்று ஜோதிடர் கூறினார்.
விருச்சிகம்
"விருச்சிக ராசியின் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் பயணம் செய்யும் ராகுவினால் புதிய வேலை, தொழிலில் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலையில் இருந்த மன அழுத்தங்கள் நீங்கும். பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் கேது ஆன்மீக பயணங்களை தரப்போகிறார். குடும்ப விவகாரங்கள் மற்றும் பூர்வீக சொத்து தொடர்பான முடிவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்" என்று ஜோதிடர் கூறினார்.
தனுசு
"தனுசு ராசியின் இரண்டாம் வீடான வாக்கு ஸ்தானத்தில் ராகு பயணம் செய்யப் போவதால் வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். நிதானமாக பேசுங்கள் கோபத்தை தவிருங்கள். பண வரவு அதிகரிக்கும். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். சொல்லிலும் செயலிலும் வேகம் அதிகரிக்கும்.
கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். அஷ்டம ஸ்தானத்தில் பயணிக்கும் கேதுவினால் சிறு தூரப் பயணங்கள் ஏற்படும். இதன் மூலம் உங்கள் தொழிலை மேம்படுத்திக் கொள்ள முடியும்" என்று ஜோதிடர் கூறினார்.
மகரம்
"மகர ராசியின் ஜென்ம ராசியில் பயணிக்கும் ராகு, சில நேரங்களில் மன அழுத்தத்தத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. புதிய முடிவுகளை எடுக்கும் போது கவனம் தேவை. உங்க ராசியில் டிசம்பர் முதல் பயணம் செய்யப் போகும் ராகு இப்பொழுது யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும்.
புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ, அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள்.
கேது களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரித்தாலும், தேவையற்ற செலவுகளைக் குறைத்தால் மட்டுமே சேமிக்க முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். வரவுக்கு மீறி செலவு செய்வதை தவிர்க்கவும்" என்று ஜோதிடர் கூறினார்.
கும்பம்
"கும்ப ராசியின் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யும் ராகு கும்ப ராசிக்காரர்களுக்கு சுப விரைய செலவுகளை ஏற்படுத்துவார். மனதில் இருந்த எதிர்மறை எண்ணங்கள் விலகும். மன உளைச்சல் விலகும். உங்களுக்கு இருந்த கெட்ட பெயர் நீங்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சந்தோஷமும் மன மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்யும் கேது கும்ப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் தனிப்பட்ட மாற்றத்தைக் கொண்டு வருவதோடு, புதிய வாய்ப்புகளையும் உருவாக்கலாம். கடன், நோய் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து அதில் லாபத்தையும் அடைவீர்கள். பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள்" என்று ஜோதிடர் கூறினார்.
மீனம்
"மீன ராசியின் லாப ஸ்தானதில் பயணம் செய்யும் ராகு பகவான் பண வரவை அதிகரிப்பார். மேலும் மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலருக்கு வெளிநாடு போகும் வாய்ப்பு கிடைக்கும்.
புது தொழில் தொடங்க வழி கிடைக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் சுமூக போக்கு உண்டாகி சக ஊழியர்களிடம் இருந்து வந்த வேற்றுமை மாறும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணிக்கும் கேதுவினால் குல தெய்வ வழிபடு அதிகரிக்கும். பிள்ளைகள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். தேவையற்ற கவலையை விடுங்கள், ஆன்மீக வழிபாடு மன அமைதியை அதிகரிக்கும்" என்று ஜோதிடர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



