Latest Updates
-
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும்
Radha Saptami 2026: இன்று உங்க ராசிக்குரிய சூரிய மந்திரத்தை சொல்லுங்க.. ஆண்டு முழுவதும் வெற்றிகள் குவியும்!
Radha Saptami 2026: உலகிற்கு ஒளி தரும் சூரியன் அவதரித்த தினம் தான் ரத சப்தமியாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தான் சூரியனின் கதிர்கள் பூமியில் விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த நாளில் தான் சூரிய பகவானுக்கு ஏழு குதிரைகளைப் பூட்டிய ரதம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட ரத சப்தமியானது ஒவ்வொரு ஆண்டும் திதிகளின் அடிப்படையில் தினம் மாறுபடும். சூரிய பகவான் தை மாதத்தில் வரும் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை சப்தமி திதியில் பிறந்ததார். அந்த வகையில் இந்த ஆண்டு ரத சப்தமியானது ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஜோதிடத்தின் படி 2026 ஆம் ஆண்டு சூரியனின் ஆதிக்கம் நிறைந்த ஆண்டாகும். எனவே இந்த ஆண்டின் ரத சப்தமி தினமானது இன்னும் விஷேசமானது. சூரியனின் சிறப்பான அருளைப் பெற விரும்பினால், சூரியன் பிறந்த நாளான ரத சப்தமி நாளில் ஒவ்வொரு ராசிக்காரரும் தங்களுக்குரிய சூரிய பகவானின் மந்திரங்களை சொல்லி பாராயணம் செய்யுங்கள். இப்போது 12 ராசிக்குமான சூரிய மந்திரங்கள் என்னவென்பதைக் காண்போம்.
மேஷம்
செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்கள் "ஓம் ககாய நமஹ" என்னும் சூரிய மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இதனால் தன்னம்பிக்கையும், தைரியமும், ஆற்றலும் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ரிஷப ராசிக்காரர்கள் "ஓம் மித்ராய நமஹ" என்னும் சூரிய மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இந்த மந்திரத்தை சொல்வதனால் வாழ்க்கை சூரியனைப் போல் பிரகாசிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த மிதுன ராசிக்காரர்கள் "ஓம் சாவித்ரே நமஹ" என்னும் சூரியனுக்குரிய மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரம் வாழ்க்கையில் அறிவையும், ஞானத்தையும் கொண்டு வரும்.
கடகம்
சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்கள் "ஓம் புஷ்ணே நமஹ" என்னும் சூரிய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரம் வாழ்வில் வாழ்க்கையில் நேர்மறையைக் கொண்டு வரும்.
சிம்மம்
சூரியனை அதிபதியாக கொண்டவர்கள் சிம்ம ராசிக்காரர்கள். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் சூரியாயே நமஹ" என்னும் சூரிய மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை சொல்வதனால் மன உறுதி அதிகரிக்கும் மற்றும் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் பானவே நமஹ" என்னும் சூரிய மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இந்த மந்திரம் பணம், செல்வத்தை ஈர்ப்பதோடு, வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கும்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் ஹிரண்யகர்பாயே நமஹ" என்னும் மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இது உங்கள் வாழ்க்கையில் தைரியத்தையும், அன்பையும் கொண்டு வரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த விருச்சிக ராசிக்காரர்கள் "ஓம் பாஸ்கரே நமஹ" என்னும் சூரிய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இது வாழ்க்கையில் உள்ள அனைத்து இருளையும் அகற்றி, சரியான பாதையைக் காட்டும்.
தனுசு
குரு பகவானை அதிபதியாக கொண்ட தனுசு ராசிக்காரர்கள் "ஓம் அர்காயே நமஹ" என்னும் சூரிய பகவானுக்கு உரிய மந்திரத்தை சொல்ல வேண்டும். இது உங்களின் கவனத்தை அதிகரிப்பதோடு, வாழ்க்கையில் புதிய வாய்ப்புக்களைக் கொண்டு வரும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த மகர ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் ரவாயே நமஹ" என்னும் சூரிய மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இது வாழ்க்கையில் சரியான பாதையைக் கொண்டு வந்து, முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான். இந்த கும்ப ராசிக்காரர்கள் "ஓம் ஆதித்யாயே நமஹ" என்னும் சூரிய பகவானின் மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை சொல்வதனால் வாழ்வில் சந்திக்கும் சவால்களை சமாளிக்கும் திறனை அளிக்கும்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த மீன ராசியைச் சேர்ந்தவர்கள் "ஓம் பாஸ்கராய நமஹ" என்னும் சூரிய மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும். இது வாழ்க்கையில் அமைதியையும், நேர்மறை எண்ணங்களையும் கொண்டு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications