Latest Updates
-
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்! -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் கோதுமை ரவா பாசிப்பருப்பு பாயாசம் - எப்படி செய்யணும் தெரியுமா? -
தலைமுடி உதிர்வை தடுக்கணுமா? அப்ப நம்ம பாட்டிமார்கள் பின்பற்றிய இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க வாழ்வில் பிரச்சனை புயல் வீசப்போகுது.. -
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா?
உங்க ராசியை சொல்லுங்க.. உங்ககிட்ட இருக்குற அமானுஷ்ய சக்தி என்னன்னு சொல்றோம்..
Zodiac Signs And Their Psychic Powers: ஜோதிடத்தின் படி, மனித வாழ்க்கையில் கிரகங்களின் தாக்கம் ஆழமாக உள்ளன. அதனால் தான் ஒருவர் பிறக்கும் போது நவகிரகங்கள் இருக்கும் நிலையைக் கொண்டு, அந்நபரின் ராசி கணிக்கப்படுகிறது. ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன.
ஒவ்வொன்றும் ஒரு அதிபதியைக் கொண்டுள்ளன. அந்த அதிபதிகளைப் பொறுத்து தான், அந்த ராசிக்குரியவர்களின் குணாதியங்கள், நல்லது, கெட்டது, எதிர்காலம், சிந்திக்கும் திறன் போன்ற பல விஷயங்கள் கணித்து கூறப்படுகின்றன.

எப்படி நம் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான குணாதிசயங்கள் உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான மற்றும் உள்ளுணர்வு சார்ந்த அமானுஷ்ய சக்திகளும் உள்ளன. இந்த சக்திகளால் தான் ஒருசிலர் குறிப்பிட்ட விஷயங்களில் சிறந்து திகழ்கின்றனர். நீங்கள் உங்களின் அனுமானுஷ்ய சக்தி என்னவென்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா? அப்படியானால் உங்கள் ராசிக்கு என்ன சக்தி உள்ளது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களிடம் உள்ள அமாஷ்ய சக்தி என்னவென்றால், அது எப்போதும் சரியான இடத்தில், சரியான நேரத்தில் இருப்பீர்கள், வளரும் வாய்ப்பைக் கண்டுபிடிப்பீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களிடம் இருக்கும் சூப்பர் சக்தி என்னவென்றால், உங்களுக்கு ஆறாவது அறிவு உள்ளது. இது மற்றவர்களின் எல்லைகளை உணரவும், உங்கள் எல்லைகளை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் தந்திரமான நபர்களைக் கண்டறியவும் உதவுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களிடம் உள்ள அமானுஷ்ய சக்தி என்னவெனில், நீங்கள் எப்போதும் உங்கள் சூழலுடன் இணைந்திருப்பீர்கள். மேலும் நீங்கள் அனுபவிக்கும் எதையும் அவதானிக்கவும், புரிந்துகொள்ளவும், ஊகிக்கவும் முடியும். அதாவது ஒருவர் அருகில் இருப்பதன் மூலம் அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களிடம் உள்ள சூப்பர் சக்தி என்னவென்றால், அது மற்றவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை உணர்ந்து, அவர்களுடன் ஆழ்ந்த உணர்ச்சி மற்றும் மன மட்டத்தில் இணைவதாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களிடம் உள்ள அமானுஷ்ய சக்தி என்றால், அது அனைவரையும் மயக்கும் நேர்மறை ஆற்றலை கொண்டிருப்பது தான். மேலும் நீங்கள் வாழ்க்கையின் மீது மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் இருப்பீர்கள். வாழ்க்கை உங்களை எத்தனை முறை வீழ்த்தினாலும், நீங்கள் துள்ளிக் குதித்து மேலும் முயற்சி செய்து, முன்னேறி வருவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களிடம் உள்ள தனித்துவமான சக்தி என்றால், அது இவர்கள் வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களை உணர்ந்து செயல்படுவார்கள். வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை உணரும் உங்களின் திறன் உங்களை ஒரு நடைமுறை மற்றும் விவேகமுள்ள நபராக ஆக்குகிறது.
துலாம்
துலாம் ராசிக்காரர்களிடம் இருக்கும் சூப்பர் சக்தி என்றால், அது இவர்கள் தங்களை விட மற்றவர்களை நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். இதன் மூலம் இவர்களால் தங்களுக்கு எதிரில் இருப்பவர்களுக்கு ஏற்றவாறு செயல்பட முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களிடம் உள்ள அமானுஷ்ய சக்தி என்றால், அது மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் மற்றும் மற்றவர்களை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்பது நன்கு தெரியும்.
தனுசு
தனுசு ராசியைச் சேர்ந்தவர்களிடம் உள்ள அமானுஷ்ய சக்தி என்றால், அது இயற்கையான நம்பிக்கையை கொண்டிருப்பதாகும். இதனால் நீங்கள் ஒருபோதும் பின்னடைவுகளையும் தோல்விகளையும் உங்களை அடைய விடமாட்டீர்கள். நீங்கள் எப்போதும் நீங்கள் சந்திக்கும் எந்தவொரு சாத்தியக்கூறையும் தேடி, ஆராய்ந்து, பயன்படுத்திக் கொள்வீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களிடம் உள்ள அமானுஷ்ய சக்தி என்றால், அது வாழ்க்கையின் வேகம் நன்கு தெரியும். பொறுமை என்பது காலத்தின் தேவையாக இருக்கும்போது நீங்கள் ஒருபோதும் அவசரப்பட மாட்டீர்கள், காலத்தின் முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுக்க வேண்டியிருக்கும் போது ஒருபோதும் தயங்க மாட்டீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களிடம் உள்ள அமானுஷ்ய சக்தி என்றால், அது விஷயங்கள் கடினமாகும் போது உணர்ந்து, மிகவும் சிக்கலான சூழ்நிலையிலிருந்து கூட வெளியேற திறம்பட திட்டம் வகுக்கும் வல்லமையைக் கொண்டிருப்பதாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களிடம் உள்ள அமானுஷ்ய சக்தி என்றால், இலக்கைப் பற்றிய உங்கள் பார்வையை ஒருபோதும் இழக்காமல் இருப்பது. ஏதாவது ஒரு விஷயம் நேர்மறையான விளைவைத் தர வாய்ப்பில்லை என்றால், நீங்கள் உள்ளுணர்வாக அறிந்து கொள்வீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications