Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
இந்த 3 ராசிக்காரங்க தங்கம் அணியக்கூடாதாம்.. இல்ல கஷ்டம் அதிகரிக்குமாம்.. உங்க ராசி இதுல இருக்கான்னு பாருங்க..
Zodiac Signs Should Not Wear Gold: ஜோதிடத்தின் படி, கற்கள் மற்றும் உலோகங்கள் கிரகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. உதாரணமாக, இரும்பு சனி பகவானுடன் தொடர்பு கொண்டுள்ளது. அதேப் போல் தங்கம் குரு பகவானுடன் தொடர்பு கொண்டுள்ளது.
உலோகங்களில் தங்கம் மிகவும் விலையுயர்ந்தது. இந்த தங்கம் ஒருவருக்கு நல்ல அழகான தோற்றத்தைக் கொடுப்பதல், பெண்களுக்கு தங்க நகைகளின் மீது சற்று ஆசை அதிகமாகவே இருக்கும். இப்படிப்பட்ட தங்கத்தை அணிவதால் ஜாதகத்தில் பலவீனமாக இருக்கும் குரு, பலம் பெறுவதாக ஜோதிடம் கூறுகிறது.

இதனால் தான் சில ராசிக்காரர்கள் தங்கத்தை அணிவதால் பலவிதமான நன்மைகளைப் பெறுகிறார்கள். ஆனால் சில ராசியை சேர்ந்தவர்கள் தங்கத்தை அணிவது நல்லதல்ல. ஒருவேளை அணிந்தால், அந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் சந்திக்க நேரிடுவதாக கூறப்படுகிறது. இப்போது எந்த ராசிக்காரர்கள் தங்கத்தை அணியக்கூடாது என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியைச் சேர்ந்தவர்கள் தங்க ஆபரணங்களை அணிவது நல்லதல்ல. இந்த ராசிக்காரர்கள் தங்கத்தை அணிந்தால், குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதோடு தொழில் ரீதியான சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதுவும் வியாபாரம் செய்து வந்தால், நஷ்டங்களை சந்திக்க நேரிடும். அடிக்கடி நோய்வாய்ப்படக்கூடும். முக்கியமாக எவ்வளவு தங்கம் சேர்த்து வைத்தாலும், அது காணாமல் போகலாம் அல்லது திருடு போகலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்கம் அணிவது நல்லதல்ல. ஒருவேளை இந்த ராசிக்காரர்கள் தங்க ஆபரணங்களை அணிந்திருந்தால், அடிக்கடி ஏதாவது ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட நேரிடும். மேலும் வாழ்க்கையில் பலவிதமான மோசமான மாற்றங்களை காணக்கூடும். முக்கியமாக வயிறு மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வேண்டியிருக்கும். எவ்வளவு முயற்சி செய்தாலும், தொழிலில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். வேலையில் பலவிதமான சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் தங்க மோதிரம், தங்க செயின் போன்ற ஆபரணங்களை அணிவதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் தங்கம் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை கொண்டு வரும். அதுவும் வேலையில் எவ்வித முன்னேற்றமும் கிடைக்காது. ஆரோக்கியம் மோசமடையும். தொழிலில் வெற்றி பெறுவது சிரமமாக இருக்கும். நிறைய பண இழப்புக்களையும், தங்கத்தை இழக்கவும் நேரிடும். முக்கியமாக பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
