Latest Updates
-
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க..
இந்த 4 நட்சத்திரங்களில் பிறந்தவங்க வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திப்பாங்களாம்.. உங்க நட்சத்திரம் இதுல இருக்கா?
Astrology Secrets: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒருவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் ஒருவர் பிறக்கும் போது, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களும் இருக்கும் நிலையைக் கொண்டு ஒருவரது ராசியும், நட்சத்திரமும் கணிக்கப்படுகிறது. இந்த ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும் உள்ளன.
ஒவ்வொரு ராசியும் குறிப்பிட்ட நட்சத்திரங்களை உள்ளடக்கியிருக்கும். மேலும் ஒவ்வொரு ராசிகளும், நட்சத்திரங்களும் அதிபதிகளைக் கொண்டுள்ளன. இந்த அதிபதிகளைப் பொறுத்து, ஒருவரது குணாதிசயங்களும், பலம் மற்றும் பலவீனமும் கணிக்கப்படுகின்றன.

அந்த வகையில் ஜோதிடத்தில் குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் இளம் வயதில் இருந்து நிறைய பிரச்சனைகளையும், சவால்களையும், கஷ்டங்களையும் சந்திப்பார்கள். அதுவும் ஒரு பிரச்சனையை கஷ்டப்பட்டு சரிசெய்த பின்னர், அடுத்த பிரச்சனை வரிசை கட்டி நின்று கொண்டிருக்கும்.
மொத்தத்தில் இவர்களின் வாழ்க்கை பிரச்சனையை சமாளிக்க பிறந்தது போன்றே இருக்கும். இப்போது அப்படி வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கும் அந்த நட்சத்திரக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
1. சதயம்
சதயம் நட்சத்திரத்தின் அதிபதி ராகு. இந்த சதய நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்களை சந்திப்பார்கள். பெரும்பாலும் தனிமையை உணர்வார்கள். தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாததால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். இதன் விளைவாக ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகம் எதிர்கொள்வார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்வர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். இவர்கள் என்ன தான் கஷ்டங்களை எதிர்கொண்டாலும், இவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு கஷ்டங்களும் அவர்களை வலிமையாக்கி, சமூகத்தில் நல்ல உயரத்தை அடைய உதவும். மொத்தத்தில் "போராட்டமின்றி வெற்றி இல்லை" என்ற பழமொழி இவர்களுக்கு சரியாக பொருந்தும்.
2. ஆயில்யம்
ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி புதன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் தங்கள் வாழ்க்கையில் நிறைய சஷ்டங்களை சந்திப்பார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் பெரும்பாலும் துரோகம் செய்யப்படுவார்கள். அடிக்கடி குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் நிறைய கருத்து வேறுபாடுகளை சந்திப்பார்கள். முக்கியமாக இந்த நட்சத்திரக்காரர்களின் கடின உழைப்பு அனைத்தும் மற்றவர்களுக்காகவே இருக்கும்.
3. பரணி
பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை சந்திக்க நேரிடும். இவர்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையான சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும். நிறைய பொறுப்புக்களை சுமக்க நேரிடும். கடின உழைத்தால் மட்டும்மே நல்ல பலன்களை மட்டுமே பெறுவார்கள். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவே இருக்காது. வாழ்க்கையே கடினமாகத் தான் இருக்கும்.
4. கேட்டை
கேட்டை நட்சத்திரத்தின் அதிபதியும் புதன் ஆவார். இந்த கேட்டை நட்சத்திரமானது விருச்சிக ராசிகளில் உள்ளது. இந்த நட்சத்திரக்காரர்கள் இளம் வயதிலேயே பொறுப்புக்களைப் பெறுவார்கள். பண பிரச்சனைகளை அதிகம் எதிர்கொள்வார்கள். பரம்பரை தொடர்பான தகராறுகளை அதிகம் சந்திப்பார்கள். இவர் வாழ்க்கையில் எதையும் எளிதில் பெறமாட்டார்கள். கஷ்டப்பட்டால் தான் நல்ல பலன்களை அறுவடை செய்ய முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
