உங்க ராசி என்னன்னு சொல்லுங்க.. உங்களுக்கு தெரியாத உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்..

Hidden Strength Of 12 Zodiac Sign In Tamil: இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருமே ஒவ்வொருவிதமான குணாதிசயங்களுடன் பிறந்துள்ளோம். இதற்கு ஒருவர் பிறக்கும் போது கிரகங்கள் இருக்கும் நிலை தான் காரணம். ஜோதிடத்தின் படி, ஒருவர் இவ்வுலகில் பிறக்கும் போது கிரகங்கள் இருக்கும் வீட்டைப் பொறுத்து, ஒருவரது ராசி கணிக்கப்படுகிறது. இந்த ராசிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அதிபதிகளைக் கொண்டுள்ளன. அந்த அதிபதிகளைப் பொறுத்து ஒருவரது குணங்கள் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது.

என்ன தான் ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒரு குறிப்பிட்ட ஆளுமை பண்புகளுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அந்த ராசிக்காரர்களிடம் பலரும் அறியாத சில மறைமுகமான பலமும் உள்ளன. அந்த பலங்கள் நம்பமுடியாத அளவிற்கு சக்தி வாய்ந்தவையாக இருக்கும். நீங்கள் உங்களின் மறைமுகமான பலம் என்னவென்று தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 12 ராசிக்காரர்களின் மறைமுகமான பலம் கொடுக்கப்பட்டுள்ளது.

Hidden Strength Of Each Zodiac Sign

மேஷம்

பொதுவாக மேஷ ராசிக்காரர்கள் தைரியமானவர்களாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும் கருதப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் மறைமுகமான மற்றொரு குணம் வலுவான விசுவாசமானவர்கள். இவர்கள் ஒருவருடன் வலுவான பிணைப்பை உருவாக்கியதும், இவர்கள் மிகவும் பாதுகாப்புடனும், ஆதரவுடனும் இருப்பார்கள். இவர்கள் ஒருவர் மீது அதிக அக்கறை கொண்டால், அவர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாதக்காரர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் உண்மையான பலம் பொறுமை. அதே சமயம் இவர்கள் மிகவும் உறுதியானவர்கள். நீண்ட காலத்திற்கு விஷயங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்கத் தயாராக இருப்பார்கள். மற்றவர்கள் கைவிட்டாலும் இவர்களின் அமைதியான தன்மை கவனம் செலுத்த உதவுகிறது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் அமைதியற்றவர்கள் மற்றும் கணிக்க முடியாதவர்கள். ஆனால் இவர்களின் உண்மையான பலம் அனுசரித்து நடப்பார்கள். மேலும் இவர்கள் வேகமாக சிந்திக்கக்கூடியவர்கள். சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றி நடந்து கொள்வார்கள். இப்படியான இவர்களின் குணம் நிச்சயமற்ற காலங்களில் இவர்களை வலிமையானவர்களாக்குகிறது.

கடகம்

கடக ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படுவதற்கு பெயர் பெற்றவர்கள். இவர்களின் உண்மையான பலம் ஆழ்ந்த உள்ளுணர்வு. இதனால் இவர்களால் நடக்கப்போவதை முன்பே உணர முடியும். மற்றவர்களை எளிதில் கணிக்க முடியும். எதையும் திறம்பட திட்டமிட முடியும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மற்றும் வெளிப்பாட்டு தன்மைக்கு பெயர் பெற்றவர்கள். ஆனால் இவர்களின் மறைமுகமான பலம் தாராள மனப்பான்மை கொண்டவர்கள் மற்றும் ஊக்கமளித்து உற்சாகப்படுத்துவதில் வல்லவர்கள். தங்களைச் சுற்றியுள்ளவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாகவும், பிரகாசிக்க வேண்டும் என்றும் மனதார விரும்புவார்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் விவரங்களில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் இவர்களின் மறைமுகமான பலம் பிரச்சனைகளை சாதுர்யமாக தீர்ப்பது. மற்றவர்கள் தவறுவதை இவர்கள் கூர்ந்து கவனிப்பார்கள். இதனால் இவர்களால் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை காண முடிகிறது.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் நல்லிணக்கத்தில் விரும்புபவர்கள். இவர்களின் மறைமுகமான பலம் என்றால் அமைதியைக் கொண்டு வருவதாகும். எப்பேற்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் அழகாக கையாள்வார்கள். எதிலும் நியாயமாக நடந்து கொள்வார்கள். இப்படியான இவர்களின் மறைமுகமான குணத்தால், இவர்கள் இருக்கும் இடம் அமைதியாகவும், மகிழ்ச்சி நிறைந்தும் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் அனைத்தையும் ஆழமாக உணரக்கூடியவர்கள். இவர்களின் மறைமுகமான பலம் உணர்ச்சி தைரியம். கடினமான உணர்வுகள், தனிப்பட்ட போராட்டங்கள் மற்றும் மனவேதனை போன்றவற்றை அமைதியான துணிச்சலுடன் எதிர்கொள்வார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் பொதுவாக சாகசத்திற்கு பெயர் பெற்றவர்கள். ஆனால் இவர்களின் பலம் நம்பிக்கை. எப்பேற்பட்ட சவால்களையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்வாக்ரள். வாழ்க்கையிலும் மற்றவர்கள் மீதும் இவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை இவர்களுக்கு முன்னேறிச் செல்வதற்கான ஆற்றலை அளிக்கிறது.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இலக்கை நோக்கி செயல்படுபவர்கள. இவர்களின் மறைமுகமான பலம் அமைதியான நம்பகத்தன்மை. இவர்கள் பேச்சை விட, செயல்களின் மூலம் வெளிப்படுத்தக்கூடியவர்கள். எத்தகைய சூழ்நிலையிலும் நம்பகமானவர்களாக இருப்பார்கள். அமைதியாக வேலை செய்யக்கூடியவர்கள். இவர்கள் ஒரு குழுவை வழிநடத்தினால், அதன் முதுகெலும்பாக இருப்பார்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் அசல் தன்மையாக அறியப்படுபவர்கள். இவர்களின் மறைமுகமான பலம் ஏற்றுக்கொள்வதாகும். மற்றவர்களின் யோசனைகளை மற்றும் அனைத்து வகையான மக்களையும் ஏற்றுக் கொள்வார்கள். இவர்களின் திறந்த மனப்பான்மை இவர்களை ஒரு புத்துணர்ச்சியூட்டும் ஒருவராக்குகிறது.

மீனம்

மீன ராசிக்காரர்கள் மிகவும் சென்சிடிவ்வானவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்களின் மறைமுகமான பலம் மன்னிப்பது. இவர்கள் மனக்கசப்பை விட அமைதியை விரும்பக்கூடியவர்கள். இதனால் செய்த தவறுக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டால், அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்க தயாராக இருப்பார்கள். இவர்கள் மென்மையான இதயம் பலவீனத்தால் இல்லாமல், ஞானத்தால் வழிநடத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, August 31, 2025, 18:48 [IST]
Desktop Bottom Promotion