Latest Updates
-
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்!
இந்த 5 நட்சத்திரங்களில் பிறந்தவங்க கணவன்/மனைவிய கிடைக்க புண்ணியம் பண்ணிருக்கணும்? உங்களோட நட்சத்திரம் என்ன?
திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இந்தியாவில் திருமணம் என்பது ஆண், பெண் சார்ந்து மட்டுமே நிச்சயிக்கப்படுவதில்லை, இங்கு திருமணத்தில் ஜாதகமும் முக்கியப்பங்கு வகிக்கிறது. திருமணத்திற்குப் பி ன் ஆண், பெண் இருவரின் ஜாதகத்தை வைத்து பொருத்தம் பார்த்த பின்னரே திருமணம் நிச்சயம் செய்யப்படுகிறது.
ஜாதகப் பொருத்தத்தில் இருவரின் ஜாதகத்தைப் பொருத்தி பார்த்து அவர்களின் வாழ்க்கை எப்படி என்று கணிக்கப்படுகிறது. ஜோதிடத்தில் சில ராசிகள் திருமணத்திற்கு மிகவும் பொருத்தமான ராசிகள் என்று கூறப்படுகிறது, அதேபோல சில நட்சத்திரங்களும் திருமணத்திற்கு மிகவும் அதிர்ஷ்டமான நட்சத்திரமாக கருதப்படுகிறது.

இந்த நட்சத்திரங்கள் திருமண வாழ்க்கையில் செழிப்பு, நல்லிணக்கம், வெற்றி மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றைக் கொண்டு வரும் என்று ஜோதிடம் கூறுகிறது. இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்பவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்தெந்த நட்சத்திரங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரோகிணி
இந்த சுப நட்சத்திரங்களில் முதல் இடத்தில் இருப்பது ரோகிணி. ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதியாக சந்திரன் இருக்கிறார். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அழகிய தோற்றம் கொண்டவர்களாகவும், படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் மற்றும் அதில் ஆர்வமாக எடுத்துக்கொள்கிறார்கள்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால், அது திருமண வாழ்வில் செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைத் தரும். இந்த நட்சத்திரங்கள் அதிர்ஷ்டத்தின் ஆதாரமாக இருப்பார்கள்.
பூசம்
இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவர்கள் பூசம். பூச நட்சத்திரம் சனிபகவானால் ஆளப்படுகிறது. எனவே பூச நட்சத்திரம் திருமண வாழ்க்கைக்கு மிகவும் சாதகமான நட்சத்திரங்களில் ஒன்றாக இருக்கிறது.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வதன் மூலம் குடும்ப பந்தம் மிகவும் வலுவடைகிறது. மேலும் அவர்கள் குடும்பத்திற்க்கும், தங்கள் வாழ்க்கைத்துணைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். மேலும் அவர்கள் தங்கள் திருமண வாழ்க்கையில் செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் அமைதியைப் பெறுகிறார்கள்.
மிருகசீரிஷம்
இந்த நட்சத்திரம் செவ்வாயால் ஆளப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதீத புத்திசாலித்தனம், ஆர்வம் மற்றும் ஆசை இருக்கும். மேலும் அவர்கள் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிந்தனைமிக்கவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் தங்கள் தனிப்பட்ட வளர்ச்சியுடன், தங்கள் குடும்பத்தின் வளர்ச்சி மற்றும் அவர்களின் மகிழ்ச்சியைப் பற்றியும் சிந்திக்கிறார்கள். அவர்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் வாழ்க்கைத்துணையின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வருவார்கள்.
சுவாதி
சுவாதி நட்சத்திரம் ராகுவால் ஆளப்படுகிறது. அவர்கள் மிகவும் சுதந்திர உணர்வும், அளவான சுயநலமும், அறிவும் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். பெரும்பாலும் மற்றவர்களின் உணர்வுகளையும், மனதையும் ஆழமாகப் புரிந்துகொண்டு அதன் மூலம் குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சியை நிரப்புகிறார்கள்.
அவர்களை திருமணம் செய்து கொள்வதால் அவர்களின் வாழ்க்கைத்துணையின் வாழ்க்கையில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் உண்டாகும். பெரும்பாலும் ஆன்மீக விஷயங்களில் விருப்பம் அவர்களின் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
விசாகம்
விசாகம் நட்சத்திரத்தின் அதிபதி குருபகவான் ஆவார். அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையின் ஆசையை நிறைவேற்ற எதையும் செய்வார்கள். அவர்கள் வாழ்க்கையின் அனைத்து முயற்சிகளையும் விடாமுயற்சியுடனும், உறுதியுடனும் செய்யக்கூடியவர்கள். விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்வது உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் சமூகத்தில் மதிக்கப்படும் உயரத்தை அடைவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
