இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசியே உலகை வெல்பவர்களாக இருப்பார்களாம்... நீங்க பிறந்த மாதம் என்ன?

ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் பிறந்த ராசியின் அடிப்படையில்தான் அவர்களின் ஆளுமையும், எதிர்காலமும் நிர்ணயிக்கப்படுகிறது. இருப்பினும், ஒருவரின் பிறந்த ராசி எவ்வளவு முக்கியமானதோ அதேயளவிற்கு அவர்களின் பிறந்த நட்சத்திரமும் மிகவும் முக்கியமானதாகும். உங்களின் பிறந்த நட்சத்திரம் உங்கள் ஆளுமை, எண்ணங்கள், பேச்சு மற்றும் நடத்தையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சக்திவாய்ந்த தகவல் தொடர்பு திறன் மற்றும் வசீகரத்தைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. அவர்களின் மிகப்பெரிய பலமே அவர்களுடைய பேச்சாற்றலும், மற்றவர்களை ஈர்க்கும் வசீகரமும்தான். அவர்கள் தங்களின் பேச்சாற்றல் மூலம் எதையும் சாதித்து விடுவார்கள். இந்த பதிவில் எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசியே காரியம் சாதிப்பவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

People Born On These Nakshatras Have Exceptional Communication Skills

மிருகசீரிஷம்

மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் பேசுவதற்கு முன் ஆழமாக சிந்திக்கிறார்கள், அவர்களின் வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. கிரகங்களின் தளபதியான செவ்வாய் அவர்களை ஆளும் கிரகமாக இருப்பதால், அவர்கள் தைரியமானவர்களாகவும், சுறுசுறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் எப்படிப்பட்ட விவாதங்களிலும் எளிதாக வெற்றி பெறுவது மட்டுமல்லாமல், மற்றவர்களின் இதயங்களையும் வெல்வார்கள். அவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அதில் வெற்றிக்கொடியை நாட்டுவார்கள்.

ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திரனால் ஆளப்படுகிறார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் வசீகரமான மற்றும் உணர்ச்சிபூர்வமாக பேசும் திறனைக் கொண்டுள்ளனர். அவர்கள் எவ்வளவு கடுமையான விஷயத்தையும் கூட மென்மையாக வெளிப்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். ஆனால் அவர்களுடன் பழகுபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அவர்கள் இந்த திறமையை மற்றவர்களை ஏமாற்றவும், தங்களின் சொந்த நலனுக்காகவும் பயன்படுத்தலாம்.

சுவாதி

சுவாதி நட்சத்திரம் மிகவும் சக்திவாய்ந்த நட்சத்திரங்களில் ஒன்றாகும், இது காற்றின் கடவுளான வாயு பகவானால் ஆளப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுதந்திரமானவர்கள் மற்றும் அளவிலாத ஆற்றல் நிறைந்தவர்கள். அவர்களின் பேச்சு வேகமானது, தர்க்கரீதியானது அதேசமயம் மிகவும் தெளிவானதாகவும் இருக்கும். எந்தவொரு சூழ்நிலைக்கும் சரியாக பொருந்தக்கூடிய வகையில் வார்த்தைகளை மாற்றுவதே அவர்களின் மிகப்பெரிய பலம். இதன்மூலம் அவர்கள் வாழ்க்கையில் பல நன்மைகளை அடைவார்கள்.

அனுஷம்

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சனிபகவனால் ஆளப்படுகிறார்கள். அவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர்கள், கம்பீரமான ஆளுமை கொண்டவர்கள். அவர்கள் குறைவாகப் பேசலாம், ஆனால் அவர்களின் வார்த்தைகள் அதிக சக்தியைக் கொண்டவை. அவர்கள் தங்கள் வார்த்தைகளில் மிகவும் சாதுர்யமானவர்களாக இருப்பார்கள், மேலும் அரசியல் மற்றும் மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் விதிவிலக்காக சிறப்பாகச் செயல்படக் கூடியவர்கள்.

ரேவதி

ரேவதி நட்சத்திரம் கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படுகிறது. நவகிரகங்களில் புதன் புத்திக்கூர்மை மற்றும் பேச்சாற்றலின் அதிபதியாகக் கருதப்படுகிறார். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயற்கையாகவே திறமையான பேச்சாளர்களாக இருப்பார்கள். அவர்களின் புத்திக்கூர்மையும், பேச்சாற்றலும் மிகவும் சக்திவாய்ந்தவையாக இருக்கும். அவர்கள் எழுத்து, இலக்கியம் மற்றும் ஊடகம் போன்ற துறைகளில் பெரிய ஆளாக உருவாக வாய்ப்புள்ளது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Wednesday, February 25, 2026, 22:55 [IST]
Desktop Bottom Promotion