இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பழிவாங்குவதில் மிருகத்தை விட ஆபத்தானவர்களாக இருப்பார்களாம்...ஜாக்கிரதை...!

இந்த உலகில் தவறு செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய தண்டனை மன்னிப்புதான். சிலர் தங்களுக்கு தீங்கிழைத்தவர்களை மன்னிக்கும் மனம் கொண்டவர்களாக இருந்தாலும் தங்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மற்றும் காயத்தை ஏற்படுத்தியவர்களை எப்போதும் மன்னிக்காத சிலர் இருக்கிறார்கள். அவர்களின் முக்கிய நோக்கமே அவர்களுக்கு தவறிழைத்தவர்களை பழிவாங்குவதுதான்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதை விட பழிவாங்குவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார்கள், மேலும் மக்களை பழிவாங்குவதற்காக திட்டங்களை உருவாக்குவதில் தங்கள் நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிக்கிறார்கள். இந்த பதிவில் பழிவாங்குவதில் மோசமானவர்களாக இருக்கும் நட்சத்திரக்காரர்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

People Born On These Nakshatras Are Great Revenge Seekers

மிருகசீரிஷம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக மிகவும் பிடிவாதக்காரராக இருப்பார்கள், அதனால் அவர்கள் பழிவாங்கும் குணம் கொண்டவர்களாக இருக்கலாம். தவறுகள் நடக்காமல் இருக்க, படிப்படியாக தங்கள் பழிவாங்கலை அவர்கள் கவனமாக திட்டமிட விரும்புகிறார்கள்.

இருப்பினும், அவர்கள் தங்கள் பழிவாங்கலைப் பற்றி மிகவும் வெளிப்படையாக இருப்பார்கள். தாங்கள் யாரை பழிவாங்கப் போகிறார்களோ அவர்களிடம் ரகசியமாக இருக்க மாட்டார்கள், அவர்களை நேரடியாக எதிர்கொள்வார்கள். அவர்கள் செய்த தவறுக்காக அவர்கள் வருந்தும்படி இரக்கமின்றி பழிவாங்குவார்கள்.

ஆயில்யம்

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதீத எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் ஒருவரால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை பழிவாங்கும் வரை அவர்களால் நிம்மதியாக இருக்க முடியாது.

அவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு தவறிழைத்தால் கூட அதற்காக கடுமையாக பழிவாங்குவார்கள். அவர்கள் உடல்ரீதியாக யாரையும் காயப்படுத்த மாட்டார்கள், மாறாக மனரீதியாக மீண்டு வர முடியாத அளவிற்கு காயப்படுத்துவார்கள்.

விசாகம்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களை காயப்படுத்தியவர்களை இரக்கமின்றி பழிவாங்குவதை தங்கள் உரிமையாகவும், அதுவே நியாயமென்றும் கருதுகிறார்கள். அவர்களுக்குள் பழிவாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தும் எந்த காயத்தையும், வெறுப்பையும் அவர்களால் ஒருபோதும் மறக்க முடியாது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதீத உணர்திறன் உடையவர்கள், எனவே அவர்கள் காயப்படும்போது, ​​அந்த நபரைப் பழிவாங்குவதும், தங்கள் கோபத்தைத் தணிப்பதும் அவர்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கும். அவர்கள் புத்திசாலிகள் மற்றும் தந்திரமானவர்கள், எனவே நேரம் பார்த்து திட்டமிட்டு சரியாக பழிவாங்குவார்கள்.

பூரட்டாதி

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களுக்கு தீங்கிழைத்தவர்களை சரியான விதத்தில் பழிவாங்கலைத் திட்டமிட தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் பெறுவார்கள். அவர்கள் மிகவும் தீர்க்கமானவர்கள், எனவே அவர்கள் பழிவாங்கத் தொடங்கினால் அவர்களின் மனதை மாற்றுவது என்பது நடவாத காரியம்.

யாராவது தங்களுக்குப் பிடித்த ஒரு நபரையோ அல்லது பொருளையோ எடுத்துக் கொண்டால், அவர்கள் தங்கள் பொருளைத் திரும்பப் பெறும் வரை தங்கள் பழிவாங்கலை நிறுத்த மாட்டார்கள், மேலும் அவர்களின் திட்டத்தில் எதிரிகளை எளிதில் சிக்க வைப்பார்கள்.

சித்திரை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை வெறுக்கிறார்கள். அது அவர்களை ஏதாவது விதத்தில் பாதித்தால், அவர்கள் மிகவும் பழிவாங்கும் மனப்பான்மை கொண்டவர்களாக மாறி, அவர்களை பழிவாங்க அனைத்தையும் செய்வார்கள்.

அவர்கள் சமநிலையை நம்புகிறார்கள், எனவே யாராவது தங்கள் வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தால், அவர்களின் வாழ்க்கையை நரகமாக்காமல் விடமாட்டார்கள். அநீதி, புண்படுத்தும் செயல்களுக்கு அவர்களிடம் குறைந்த சகிப்புத்தன்மையே உள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, March 4, 2025, 16:15 [IST]
Desktop Bottom Promotion